ஐஸ்வர்யா ரஜினியின் அடுத்த திரைப்படத்தில் டுவிஸ்ட்:  ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான ’பயணி’ என்ற மியூசிக் வீடியோ சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விரைவில் ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்பட்டது.

இதனை அடுத்து தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க இருக்கும் அடுத்த திரைப்படம் தமிழில் உருவாகும் என எதிர்பார்த்த நிலையில் இந்த படம் ஹிந்தியில் உருவாகவிருக்கும் ஒரு அழகான காதல் கதை என்பது ரசிகர்களுக்கு ஒரு டுவிஸ்ட். இந்த படத்திற்கு ’ ஓ சாதிசால்’ (Oh Saathi Chal) என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதோடு சற்றுமுன் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்அரும் வெளியாகியுள்ளது.

இந்த வாய்ப்பை அளித்த தயாரிப்பாளர் மீனு அரோராவுக்கு தனது நன்றி என்று கூறியுள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் ஐஸ்வர்யா ரஜினிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

மாலத்தீவில் அல்ட்ராசிட்டி பண்ணும் நடிகை தமன்னா… வைரலாகும் கிளாமர் புகைப்படங்கள்!

பான் இந்தியா நடிகையாக சினிமாவை கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை தமன்னா தற்போது மாலத்தீவுக்குச் சுற்றுலா சென்றுள்ளார்.

மீண்டும் பாண்டவர் அணி கையில் நடிகர் சங்கம்: வெற்றி கொண்டாட்டம்!

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண நீதிமன்றம் தடை விதித்தது

படம் தோல்வி அடைந்ததால் ரூ.50 கோடியை தயாரிப்பாளரிடம் திருப்பி கொடுத்த நடிகர்!

பொதுவாக பெரிய நடிகரின் படங்கள் தோல்வி அடைந்தால் அந்த தயாரிப்பாளரை சமாதானப்படுத்துவதற்காக இன்னொரு திரைப்படம் நடித்துக் கொடுப்பதாக தான் நடிகர்கள் கூறுவார்களே தவிர வாங்கிய சம்பளத்தை திருப்பிக்

அரபிக்குத்து பாடலுக்கு செம ஆட்டம் போட்ட பிரபல குத்துச்சண்டை வீராங்கனை!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' படத்தின் 2 வது பாடலான 'ஜாலிலோ ஜிம்கானோ' என்ற பாடல் வெளியாகிய போதிலும் முதலில் ரிலீசான அரபிக்குத்து பாடல் இன்னும் சமூக வலைத்தளங்களில்

பொய் சொன்னதற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன்: நடிகை மனிஷா யாதவ் வீடியோ வைரல்!

நடிகை மனிஷா யாதவ் நான் பிஸியாக இருந்ததாக பொய் கூறினேன் என்றும் ஆனால் அதற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும் யோகா செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில்