close
Choose your channels

ஐஸ்வர்யா ரஜினியின் அடுத்த திரைப்படத்தில் டுவிஸ்ட்:  ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்!

Monday, March 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான ’பயணி’ என்ற மியூசிக் வீடியோ சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விரைவில் ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்பட்டது.

இதனை அடுத்து தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க இருக்கும் அடுத்த திரைப்படம் தமிழில் உருவாகும் என எதிர்பார்த்த நிலையில் இந்த படம் ஹிந்தியில் உருவாகவிருக்கும் ஒரு அழகான காதல் கதை என்பது ரசிகர்களுக்கு ஒரு டுவிஸ்ட். இந்த படத்திற்கு ’ ஓ சாதிசால்’ (Oh Saathi Chal) என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதோடு சற்றுமுன் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்அரும் வெளியாகியுள்ளது.

இந்த வாய்ப்பை அளித்த தயாரிப்பாளர் மீனு அரோராவுக்கு தனது நன்றி என்று கூறியுள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் ஐஸ்வர்யா ரஜினிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.