close
Choose your channels

எனது அப்பா ஒரு சங்கியா? 'லால் சலாம்' விழாவில் ஆவேசமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!

Saturday, January 27, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவ்வப்போது பாஜகவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருவதை அடுத்து சமூக வலைதளங்களில் அவரை சங்கி என்று தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து நேற்று நடந்த ’லால் சலாம்’ இசை வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆவேசமாக இதற்கு பதில் அளித்துள்ளார்.

இந்த விழாவில் அவர் பேசியபோது ’சமூக வலைதளங்களில் என்னுடைய அப்பாவை சங்கி என அழைப்பதை பார்த்ததும் எனக்கு கோபம் வரும். அவர் சங்கியாக இருந்தால் ’லால் சலாம்’ போன்ற படங்களில் நடித்திருக்க மாட்டார். ரஜினிகாந்த் சங்கி கிடையாது, மனிதநேயமிக்க ஒருவரால் மட்டுமே இந்த கேரக்டரில் நடிக்க முடியும்.

நான் ரஜினிகாந்த் மகள் என்பதால் நான் சொல்லும் கதையை யாரும் நம்பிக்கையுடன் கேட்க மாட்டார்கள். எனது அப்பாவுக்காக மரியாதைக்காக என்னிடம் பேசுவார்கள், கதை கேட்பார்கள். ரஜினியின் மகள் என்பதால் தான் எனக்கு யாரும் பட வாய்ப்பு கிடைத்ததில்லை.

திறமை இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும் என்பதை நிரூபிக்கவே ’லால் சலாம்’ படத்தை இயக்கி உள்ளேன் என்று கூறியுள்ளார். அவருடைய இந்த ஆவேச பேச்சு சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.