அஜய் ஞானமுத்துவின் அடுத்த பட ஹீரோ இவரா? 

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘கோப்ரா’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், அஜய் ஞானமுத்துவின் அடுத்த படத்தில் நடிக்கும் நடிகர் யார் என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

அருள்நிதி நடித்த ’டிமான்டி காலனி’ நயன்தாரா நடித்த ’இமைக்காநொடிகள்’ ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் அஜய் ஞானமுத்து. இவரது இயக்கத்தில் விக்ரம் நடித்த ’கோப்ரா’ திரைப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தாலும் தற்போது ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அஜய் ஞானமுத்து அடுத்ததாக ஏஜிஎஸ் நிறுவனத்திற்காக ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார் என்று செய்திகள் வெளியானது. இந்த படத்தில் நாயகனாக நடிக்க மீண்டும் விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இந்த பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

எனவே அஜய் ஞானமுத்து இயக்கத்தில் மீண்டும் விக்ரம் நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ‘கோப்ரா’ ரிலீசுக்கு முன்னரே இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்திருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி கோலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

இந்த விருதினை பெறும் முதல் இந்தியர் இவர்தான்: பிக்பாஸ் தமிழ் போட்டியாளருக்கு குவியும் வாழ்த்துக்கள்!

தாய்லாந்தில் நடைபெற்ற போட்டி ஒன்றில் பிக் பாஸ் தமிழ் போட்டியாளர்களில் ஒருவர் கலந்து கொண்ட நிலையில் அவருக்கு விருது கிடைத்துள்ளது.

ஸ்கூல் காலத்தில் இருந்தே சூர்யா மீது க்ரஷ்: விவாகரத்து பெற்ற தமிழ் நடிகை

பள்ளி காலத்தில் இருந்தே தனக்கு சூர்யா மீது க்ரஷ் என விவாகரத்து பெற்ற நடிகை ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அக்ஷய் குமாரை அரெஸ்ட் செய்து நாடு கடத்த வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமியின் அதிர்ச்சி டுவிட்!

பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரை கைது செய்ய வேண்டும் என்றும் அவரது சொந்த நாடான கனடா நாட்டிற்கு அவரை திருப்பி அனுப்ப வேண்டுமென்றும் பிரபல அரசியல்வாதியும் எம்பியுமான சுப்பிரமணியன்

இந்தி படங்களின் தொடர் தோல்விக்கு தென்னிந்தியர்கள் தான் காரணம்: நயன்தாரா பட நடிகர்

தென்னிந்திய திரைப்படங்களான புஷ்பா, ஆர்.ஆர்.ஆர், கேஜிஎப் 2,  விக்ரம் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று நூற்றுக்கணக்கான கோடிகளை வசூல் செய்து வருகிறது.

'வடசென்னை 2' படம் எப்போது? இயக்குனர் வெற்றிமாறன் தகவல்!

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான 'வடசென்னை' திரைப்படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும்