close
Choose your channels

அஜித்-அர்ஜூன் திடீர் சந்திப்பு.. 'மங்காத்தா 2' உருவாகிறதா?

Monday, November 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’மங்காத்தா’ படத்தில் இணைந்து நடித்த அஜித் மட்டும் அர்ஜூன் சமீபத்தில் சந்தித்துள்ள நிலையில் ’மங்காத்தா 2’ படம் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜீத் மற்றும் அர்ஜுன் நடிப்பில் உருவான மங்காத்தா திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் அஜித்தின் 50வது படமான இந்த படம் வசூல் அளவில் சாதனை செய்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ’மங்காத்தா’ படத்தின் இரண்டாம் பாகத்தை வெங்கட் பிரபு இயக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கைக்கு பதிலளித்த வெங்கட்பிரபு, ’மங்காத்தா 2’ படத்தின் கதை தயாராக இருக்கிறது என்றும் அஜித் எப்போது ஓகே சொன்னாலும் அந்த படத்தை ஆரம்பிக்க தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ’மங்காத்தா’ படத்தில் இரண்டு முக்கிய கேரக்டர்களில் நடித்து இருந்த அஜீத் மட்டும் அர்ஜுன் ஆகியோர் சமீபத்தில் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு குறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை அடுத்து விரைவில் ’மங்காத்தா’ படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment