சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் அஜித்-விஜய்: பிரபல இயக்குனர் திட்டம்!

அஜித் நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவரையும் இணைத்து நடிக்கவைக்க ஆசைப்படுவதாக பிரபல இயக்குனர் ஒருவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அஜித் நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான திரைப்படம் ’மங்காத்தா’. இந்த திரைப்படம் ரூ.24 கோடியில் தயாராகி ரூ.100 கோடி வரை வசூல் செய்தது என்பதும் அஜீத்தின் திரையுலக வாழ்வில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’மங்காத்தா’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க வேண்டும் என வெங்கட் பிரபுவிடம் அஜித் ரசிகர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பதும், மங்காத்தா படத்தின் திரைக்கதை தயாராக இருப்பதாகவும் அஜித் எப்போது சொன்னாலும் படப்பிடிப்பை ஆரம்பிக்க தயார் என்றும் பலமுறை இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ’மங்காத்தா’ முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் இன்னும் சிறப்பான கதையை தயார் செய்து வைத்துள்ளேன் என்றும், அஜித், விஜய் இருவரையும் வைத்து ’மங்காத்தா 2’ படத்தை எடுக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறேன் என்றும் இந்த கதையை இருவரிடத்திலும் கூறிவிட்டேன் என்றும் விரைவில் இந்த படம் உருவாகும் என்று நம்புகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அஜித், விஜய் நடிப்பில் ’மங்காத்தா 2 ’ படம் உருவானால் இந்த படம் நிச்சயம் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்யும் படமாக இருக்கும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More News

அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய அதிமுக பிரமுகர்கள்!

அஜித்தின் பிறந்தநாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஏராளமானோர் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

'காத்துவாக்குல ரெண்டு காதல்': ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா!

விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்ற திரைப்படம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியான

நடிகர் விவேக் மனைவி கோரிக்கை நிறைவேற்றம்: தமிழக அரசின் அரசாணை

சமீபத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்த மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் மனைவி கோரிக்கை ஒன்றை அளித்த நிலையில் அந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில்

உழைப்பாளர் தினத்தில் உதித்த உழைப்பாளி: அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள்!

உழைப்பாளர் தினத்தில் உதித்த உழைப்பாளி: அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள்!

டூபீஸ் உடையில் செம கலக்கலான போஸ்: வைரலாகும் ஹன்சிகா புகைப்படம்!

தமிழ் திரை உலகின் நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா தனது சமூக வலைத்தளத்தில் டூ பீஸ் உடையில் கலக்கலான போஸ் கொடுத்து உள்ளதை அடுத்து இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.