இது எந்த இடம்? அஜித் பைக் பயணத்தின் அட்டகாசமான புகைப்படம்!

  • IndiaGlitz, [Wednesday,October 27 2021]

பைக் பிரியரான தல அஜித் கடந்த சில நாட்களாக பைக்கில் நீண்ட நெடும்பயணம் சுற்றி வருகிறார் என்பதும், அவர் ஆங்காங்கே சுற்றுப்பயணம் செய்யும் போது எடுத்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன என்பதும் தெரிந்ததே.

குறிப்பாக இந்தியா பாகிஸ்தான் எல்லையில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுடன் அவர் எடுத்து கொண்ட புகைப்படம் மற்றும் பாலைவனத்தில் தனியாக பைக்கின் நிழலில் உட்கார்ந்து கொண்டு தண்ணீர் குடிக்கும் புகைப்படம் ஆகியவை மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. மிகப்பெரிய மலை உச்சியில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் எந்த இடம் என்று தெரியவில்லை என்றாலும் இந்த புகைப்படம் அட்டகாசமாக இருப்பதாக அஜித் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல் இன்னும் பல அரிய புகைப் படங்கள் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தல அஜித் தற்போது நடித்து முடித்துள்ள ‘வலிமை’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது என்பதும் அவருடைய அடுத்த படத்தையும் எச். வினோத் இயக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ராகவா லாரன்ஸ்!

நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் என பல்வேறு அவதாரங்களில் தமிழ் திரையுலகில் ஜொலித்து வரும் நட்சத்திரங்களில் ஒருவர் ராகவா லாரன்ஸ். இவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில்

கள்ளக்குறிச்சி பட்டாசு கடையில் தீ விபத்து… பலர் உடல்கருகி உயிரிழந்த அவலம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் வைக்கப்பட்டிருந்த பட்டாசு கடை

கமல், இளையராஜா, பாராதிராஜாவுக்கும் பால்கே விருது: பிரபலத்தின் வேண்டுகோள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு சமீபத்தில் தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்ட நிலையில் அவருக்கு ஒட்டுமொத்த திரையுலகம் மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்

வண்ணம் கொண்ட வெண்ணிலவு… வாணிபோஜனின் அழகியப் புகைப்படங்கள்!

சின்னத்திரை நட்சத்திரமாக ஜொலித்து தற்போது சினிமாவில் நுழைந்திருக்கும்

டயட் இல்லாமல் உடல் எடையை குறைக்க… சில எளிய டிப்ஸ்!

உடல்எடையை குறைக்க வேண்டும் என்பது நம்மில் பலருக்கு இருக்கும் ஒரு கனவு.