close
Choose your channels

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ராகவா லாரன்ஸ்!

Wednesday, October 27, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் என பல்வேறு அவதாரங்களில் தமிழ் திரையுலகில் ஜொலித்து வரும் நட்சத்திரங்களில் ஒருவர் ராகவா லாரன்ஸ். இவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரை உலகில் நடன இயக்குநராக அறிமுகமான ராகவா லாரன்ஸ், பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்தார் என்பதும் அதன் பின்னர் ஹீரோவாகவும் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த ’முனி’ ’காஞ்சனா’ ’காஞ்சனா 2’ ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பதும் குறிப்பாக ’காஞ்சனா’ திரைப்படம் 100 கோடி வசூலை குவித்து சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரையுலகை பொறுத்தவரை ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் ஆகிய முன்னணி நடிகர்களின் படங்கள் மட்டுமே 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனையை எட்டிய நிலையில் ராகவா லாரன்ஸ் திரைப்படம் 100 கோடி ரூபாய் சாதனை என்பது மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் திரை உலகில் மட்டுமன்றி பல்வேறு சமூக சேவைகளையும் ராகவா லாரன்ஸ் செய்து வருகிறார் என்பதும் இயற்கை பேரிடர் ஏற்படும்போது நிதியுதவி செய்யும் முதல் நபராக ராகவா லாரன்ஸ் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் முதல் அலை ஏற்பட்டபோது அவர் கோடிக்கணக்கில் தமிழக அரசுக்கு நிதி கொடுத்ததோடு தனிப்பட்ட முறையில் பலருக்கு நிதி உதவி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துக்கொண்ட ராகவா லாரன்ஸ் பாலிவுட்டிலும் கால் பதித்து சாதனை செய்தார். அக்ஷய் குமார் நடித்த ’லட்சுமி பாம்’ என்ற திரைப்படத்தை இயக்கினார் என்பதும் அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ராகவா லாரன்ஸ் தற்போது ’ருத்ரன்’ ‘அதிகாரம்’ மற்றும் ’துர்கா’ ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

திரையுலகிலும் சரி, சமூக சேவையிலும் சரி முன்னணியில் இருக்கும் ராகவா லாரன்ஸ் அவர்கள் இன்னும் பல வெற்றிகளை குவித்து ஏழை எளிய மக்களுக்கு அதிக உதவிகளை செய்ய வேண்டும் என்று இந்த இனிய பிறந்த நாளில் அவருக்கு IndiaGlitz சார்பில் எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.