ஜெயலலிதா மறைவிற்கு அஜித் இரங்கல் அறிக்கை

  • IndiaGlitz, [Monday,December 05 2016]

திரையுலகில் இருந்து முதல்வரான ஜெயலலிதாவின் மறைவு திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்றால் அது மிகையில்லை. இந்நிலையில் அஜித், ஜெயலலிதாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

மாண்புமிகு டாக்டர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் மறைவால் வாடும் என் சக தமிழ்நாட்டு மக்களுக்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

பல்வேறு இன்னல்களை கடந்து சாதனை புரிந்த உயர்ந்த தலைவர் அவர். அவர் மீண்டும் ஆரோக்கியத்துடன் வரவேண்டும் என்று நாம் பிரார்த்தித்து கொண்டிருக்கும் வேளையில் அவர் மறைந்துவிட்டார் என்ற செய்தி என்னை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். அவரது பிரிவால் வாடும் எனக்கும், எண்ணற்ற என் சக தமிழக மக்களுக்கும் இந்த பிரிவை தாங்கும் வல்லமையை தர இறைவனை வேண்டிக்கொள்கிறேன். இவ்வாறு அஜித் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

More News

ஜெயலலிதாவுக்கு இறுதிச்சடங்கு செய்வது யார்?

மக்களின் முதல்வராக இருந்த தமிழகத்தின் தன்னிகரில்லா தலைவி ஜெயலலிதாவின் மறைவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் அன்னாரது இறுதிச்சடங்கை செய்வது யார்? என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இந்திய நாடே தன் வீரப்புதல்வியை இழந்துவிட்டது. ரஜினிகாந்த்

நேற்று வரை தமிழக முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதா உடல்நிலை கோளாறு காரணமாக மரணம் அடைந்தார். அவரது இழப்பு பொதுமக்களுக்கு மட்டுமின்றி திரையுலகிற்கும் பேரிழப்பு ஆகும்

மரணம் அடைந்த ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்படுவது எங்கே?

தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானதால் தமிழக மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். அவருடைய உடல் இன்னும் ஒருசில மணி நேரத்தில் போயஸ் கார்டன் எடுத்து செல்லப்படும் என தெரிகிறது. 

சென்னை சட்ட ஒழுங்கை பாதுகாக்க 2 புதிய ஐ.ஜிக்கள் நியமனம்

தமிழக முதல்வரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதை அடுத்து பிற நகரங்களில் இருந்து அதிமுக தொண்டர்கள் சென்னையில் குவிந்த வண்ணம் உள்ளனர். 

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை தொடர்கிறது. அப்பல்லோ அறிக்கை

தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானதாக செய்திகள் வெளியானது தவறு என்றும் அவருக்கு சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது என்றும் அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை ஒன்றை அளித்துள்ளது.