விஸ்வாசம் பேனர் சரிந்து ஐந்து பேர் படுகாயம்

  • IndiaGlitz, [Thursday,January 10 2019]

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அதிகாலை 1 மணிக்கே முதல் காட்சி ஆரம்பித்துவிட்டதால் விடிய விடிய அஜித் ரசிகர்கள் தூங்காமல் படத்தின் முதல் காட்சியை பார்த்து ரசித்தனர்.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் 'விஸ்வாசம்' வெளியாகும் திரையரங்குகளில் அஜித் ரசிகர்கள் கடந்த ஒரு வாரமாஅக பேனர்கள், கட் அவுட்டுக்கள் வைத்து அசத்தி வந்த நிலையில் இன்று அந்த கட் அவுட்டுக்களுக்கு பாலாபிஷேகமும் செய்தனர்.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் என்ற பகுதியில் உள்ள ஒரு தியேட்டரில் அஜித்தின் கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்வதற்காக அஜித் ரசிகர்கள் கட் அவுட்டின் மீது ஏறிய போது அந்த கட் அவுட் திடீரென சரிந்தது. இதில் இடுபாடுகளில் சிக்கி 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்த 5 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இதுபோன்ற விபரீதங்களை தடுக்க சினிமா மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு வைக்கப்படும் கட் அவுட்டுகளுக்கு அரசு தடை விதிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

More News

இது லவ் மேரேஜ்: மணமகள் அனிஷா குறித்து விஷால்

நடிகரும் நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷாலுக்கு அவரது பெற்றோர்கள் ஐதராபாத் தொழிலதிபர் ஒருவரின் மகளான அனிஷா பெண் பார்த்துள்ளதாகவும்

'பேட்ட' விஸ்வாசம் திரையிட்ட திரையரங்குகளுக்கு அபராதம்?

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த 'பேட்ட' மற்றும் அஜித் நடித்த 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் இன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக பெருவாரியான திரையரங்குகளில் வெளியாகியிருந்தது

விஜய்சேதுபதியின் செல்லப்பிள்ளையாக மாறிய இளம் நடிகர்

கடந்த ஆண்டு கவுதம் கார்த்திக் நடித்த 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்', 'இருட்டு அறையில் முரட்டு குத்து' மற்றும் மிஸ்டர் சந்திரமெளலி ஆகிய திரைப்படங்கள் வெளிவந்த நிலையில்

ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரபல நடிகை

'தீராத விளையாட்டு பிள்ளை', ''யாவரும் நலம்', 'சேரன் நடித்த 'யுத்தம் செய்', 'ஜெயம் ரவி நடித்த 'ஆதி பகவன்' ஆகிய தமிழ் படங்கள் உள்பட ஏராளமான தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்த நடிகை நீதுசந்திரா

தல அஜித்துடன் இணைந்த இயக்குனர் சேரன்

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக இன்னும் ஒருசில மணி நேரங்களே இருக்கும் நிலையில் ஒன்றரை வருடங்கள் கழித்து அஜித் ரசிகர்களுக்கு தல தரிசனம் திரையில் கிடைக்கவுள்ளது.