போனிகபூரை காணவில்லை: அஜித் ரசிகர்களின் போஸ்டரால் பரபரப்பு 

  • IndiaGlitz, [Friday,November 13 2020]

அஜித் நடித்து வரும் ’வலிமை’ படத்தின் டைட்டில் ஒரு வருடங்களுக்கு முன் வெளியான நிலையில் அதன் பிறகு அந்த படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனரும் எந்தவித அப்டேட்டும் இதுவரை வழங்கவில்லை 

அஜித் ரசிகர்கள் ’வலிமை’ படத்தின் அப்டேட்டை கடந்த பல மாதங்களாக கேட்டும் எந்தவித அப்டேட்டும் வராததால் வெறுத்துப் போய் உள்ளனர். ’வலிமை’ படத்திற்கு பின் ஆரம்பிக்கப்பட்ட பல படங்களின் அப்டேட்டுக்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் ’வலிமை’ படம் குறித்த ஒரு சிறிய தகவலைகூட படக்குழுவினர் வெளியிடாமல் உள்ளது

ஒரு கட்டத்தில் சமூக வலைதளங்களில் கடுமையான வார்த்தைகளால் ’வலிமை’ தயாரிப்பாளர் போனிகபூரை அஜித் ரசிகர்கள் விமர்சனம் செய்தனர். இந்த நிலையில் வழக்கம் போல் போஸ்டர்களுக்கு புகழ்பெற்ற மதுரையில் அஜீத் ரசிகர்கள் ’போனிகபுரை காணவில்லை என்று போஸ்டர் ஒட்டி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த 8 மாதங்களாக சமூக வலைதளங்கள் மூலம் அஜித்தின் ’வலிமை’ படத்தின் அப்டேட்டை கேட்டு வருகிறோம் என்று குறிப்பிட்டுள்ள அஜித் ரசிகர்கள் ’போனிகபூரை காணவில்லை என்றும் அப்டேட்டுக்காக காத்திருக்கின்றோம் என்றும் அந்த போஸ்டரில் அஜித் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த போஸ்டர் மதுரையின் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

More News

சாத்தான்குளம் சம்பவம் போல் எங்களுக்கு நடந்துவிடும்: விஜய் கட்சி தலைவர் மனைவி அச்சம்!

சாத்தான்குளம் தந்தை மகனுக்கு நடந்தது போல் எங்கள் குடும்பத்திற்கும் நடந்து விடுமோ என்ற அச்சம் இருப்பதாக விஜய் கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

பிரம்ம முகூர்த்தத்தில் 'ஈஸ்வரன்' டீஸர்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு 

சிம்பு, நிதி அகர்வால் நடிப்பில் சுசீந்திரன் இயக்கிய 'ஈஸ்வரன்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

சாதித்துக்காட்டிய இளம் நட்சத்திர வீரர்கள்!

இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் பல சர்ச்சைகள், விமர்சனங்கள் இருந்தாலும்

அடுத்த வார பிக்பாஸ் கேப்டன் இவர்தான்: ஷிவானிக்கு பிரச்சனை வருமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த வாரம் கேப்டன் யார் என்பதை முடிவு செய்ய ஆஜித், கேப்ரில்லா மற்றும் நிஷா ஆகிய மூவரும் நாமினேட் செய்யப்பட்டார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

ட்ரம்பிடம் இருந்து விவாகரத்து பெற்றால்… மெலானியாவைச் சுற்றும் சில திடுக்கிடும் கேள்விகள்!!!

அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து ட்ரம்ப் எப்போது ஓய்வு பெறுவார்?  அவரை எப்போது விவாகரத்து செய்யலாம் எனச் சில ஆண்டுகளாகவே மெலனியா ட்ரம்ப் காத்துக் கொண்டிருந்தார்