close
Choose your channels

மோகன் நடிக்க வேண்டிய படத்தில் அஜித்? இயக்குனர் கூறிய ஆச்சரிய தகவல்

Wednesday, April 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் தற்போது நடித்து கொண்டிருக்கும் ’ஏகே 61’ படத்தின் கதையை முதலில் இயக்குனர் வினோத், சில்வர் ஜூப்ளி ஸ்டார் மோகன் இடம்தான் கூறினார் என்று இயக்குனர் விஜய்ஸ்ரீ தெரிவித்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

கட்நத 80கள் மற்றும் 90களில் தொடர் வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகர் மோகன் என்பது அனைவரும் அறிந்ததே. அவரது படத்தின் கதை, பாடல்கள் அனைத்தும் சூப்பராக இருக்கும் என்பதும் அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தற்போது நடிகர் மோகன் ’ஹரா’ என்ற ஹாரர் படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை இயக்குனர் விஜய்ஸ்ரீ இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் விஜய்ஸ்ரீ அளித்த பேட்டியில், ‘நான் இந்த படத்தின் கதையை மோகனிடம் கூறுவதற்காக இரண்டு வருடமாக அவரை ஃபாலோ செய்து கொண்டிருந்தேன். தற்போது ’ஏகே 61’ படத்தை இயக்கி வரும் வினோத் கூட அந்த படத்தின் கதையை முதலில் மோகனிடம் தான் கூறினார் என்று கூறியுள்ளார்.

அஜித் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படத்தின் கதை முதலில் மோகனுக்கு சொல்லப்பட்ட கதை என விஜய்ஸ்ரீ கூறிய இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.