கெட்டப்பை மாற்றிய அஜித்! விஸ்வாசம் படத்தில் 3 வேடமா?

  • IndiaGlitz, [Wednesday,October 17 2018]

அஜித் நடித்து வரும் 'விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் அஜித் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் வயதான, மற்றும் இளமையான அஜித்தை பார்த்தோம். மேலும் இந்த இரண்டு வேடங்களிலும் அஜித் தாடி வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள ஒரு புகைப்படத்தில் அஜித் தாடியில்லாமல் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தோற்றமளிக்கின்றார். எனவே இந்த படத்தில் அஜித் மூன்று வேடங்களில் நடிக்கின்றாரா? அல்லது இரண்டு வேடங்களில் உள்ள கேரக்டர் ஒன்று தாடியில்லாமல் இருக்கின்றதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கேள்விக்கு விடை படம் ரிலீஸ் ஆகும் தினத்தில்தான் தெரியவரும்

அஜித், நயன்தாரா, தம்பி ராமையா, விவேக், ரோபோசங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் வெளிவரவுள்ளது. டி.இமான் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது

More News

வைரமுத்து மீது மலேசியா வாசுதேவன் மருமகள் கூறிய 'மீடூ' புகார்

பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கூறிய பாலியல் புகாரை அடுத்து வேறு சில பெண்களும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து தைரியமாக கூறி வருகின்றனர்.

ஓவியாவுக்கு கிடைத்த அதே வாய்ப்பு ரித்விகாவுக்கு!

பிக்பாஸ் 1 நிகழ்ச்சியின் வெற்றியாளராக ஆரவ் இருந்தாலும் மக்களின் வெற்றியாளர் ஓவியாதான். அவருக்கு கிடைத்த புகழ் பிக்பாஸ் 2 போட்டியாளர்களில் கூட யாருக்கும் கிடைக்கவில்லை.

என்.ஜி.கே ரிலீஸ் குறித்து தயாரிப்பாளரின் புதிய தகவல்

சூர்யா, நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'என்.ஜி.கே' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது. தீபாவளி கழித்து இந்த படம் வெளியாகும்

தனுஷூக்கு வாழ்த்து தெரிவித்த சிம்பு

தனுஷ் நடித்த 'வடசென்னை' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளீயாகிவுள்ளது. இந்த படத்தின் அதிகாலை காட்சிகள் ஆரம்பித்து பாசிட்டிவ் ரிசல்ட்டுக்கள் வர தொடங்கிவிட்டதால் படக்குழுவினர் உற்சாகமாக உள்ளனர்.

'ஆண் தேவதை' கவினுக்கு வாழ்த்து கூறிய கமல்

சமீபத்தில் வெளியான இயக்குனர் தாமிராவின் 'ஆண் தேவதை' திரைப்படத்திற்கு ஊடகங்களின் பாராட்டுக்கள் கிடைத்தது என்பது தெரிந்ததே.