ஷங்கரின் அடுத்த படத்தில் அஜித் வில்லனா? 'ரோலக்ஸ்' மாதிரி மாஸ் கேரக்டரா?

  • IndiaGlitz, [Tuesday,March 14 2023]

ஷங்கரின் அடுத்த திரைப்படத்தில் வில்லனாக நடிக்க அஜித்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் ’விக்ரம்’ படத்தில் வரும் ரோலக்ஸ் கேரக்டர் போல் மாஸ் கேரக்டர் இது என்றும் கூறப்படுவது கோலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் தேஜா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’ஆர்சி 15’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் சிறப்பு தோற்றத்தில் ஒரு மாஸ் வில்லன் கேரக்டரில் ஒரு பெரிய நடிகரை நடிக்க வைக்க வேண்டும் என படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் இதற்காக அஜித்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

‘விக்ரம்’ படத்தில் வரும் ரோலக்ஸ் கேரக்டர் போலவே இந்த கேரக்டரும் மாஸ் கேரக்டர் என்றும் இந்த படத்தின் அடுத்த பாகம் உருவாக்கப்பட்டால் அதில் மெயின் வில்லன் கேரக்டராகவும் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை, அஜித் இடமிருந்து இதற்கு என்ன பதில் வந்தது என்பதை எல்லாம் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
 

More News

மிகப்பெரிய இழப்பு.. மறைந்த நடிகர் விவேக் குறித்து ஏ.ஆர்.ரஹ்மானின் பதிவு..!

நடிகர் விவேக் கடந்த 2021 ஆம் ஆண்டு காலமான நிலையில் அவரது மறைவு மிகப்பெரிய இழப்பு என இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

ஆஸ்கர் விருது வென்ற படத்திற்கும் 'சூரரை போற்று' படத்திற்கும் இப்படி ஒரு தொடர்பா?

ஆஸ்கர் விருது வென்ற "தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்" என்ற தமிழ் குறும்படத்திற்கும் 'சூரரை போற்று' படத்திற்கும் தொடர்பு உள்ளது என்ற தகவல் பெறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

அன்றே கணித்த கமல்ஹாசன்.. 4 ஆஸ்கர் விருது வென்ற படம் குறித்து என்ன சொன்னார் தெரியுமா?

 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் 'All Quiet on the Western Front' என்ற திரைப்படம் நான்கு விருதுகளை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த சர்வதேச திரைப்படம்,

ராகவா லாரன்ஸின் 'ருத்ரன்' படத்தின் சூப்பர் அப்டேட்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!

 நடிகரும் இயக்குனரும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படங்களில் ஒன்று 'ருத்ரன்'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்ட போஸ்ட் புரொடக்ஷன்

பிகினி உடையில் 'சார்பாட்டா பரம்பரை' நடிகை.. வேற லெவல் போஸ்..!

 இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான 'சார்பாட்டா பரம்பரை' உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை வேற லெவலில் பிகினி உடையில் போஸ் கொடுத்துள்ள போட்டோ சூட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.