close
Choose your channels

அன்றே கணித்த கமல்ஹாசன்.. 4 ஆஸ்கர் விருது வென்ற படம் குறித்து என்ன சொன்னார் தெரியுமா?

Monday, March 13, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் 'All Quiet on the Western Front’ என்ற திரைப்படம் நான்கு விருதுகளை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த சர்வதேச திரைப்படம், சிறந்த ஒரிஜினல் ஸ்கோர், சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த புரொடக்ஷன் டிசைன் ஆகிய நான்கு ஆஸ்கர் விருதுகளை வென்றது என்பதும் ஏழு விருதுகளுக்காக இந்த படம் நாமினேஷன் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்த படத்தின் குழுவினர்களுக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் இந்த படம் குறித்து ’விக்ரம்’ திரைப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த விழாவில் அவர் பேசிய போது ’சமீபத்தில் 'All Quiet on the Western Front’ என்ற படத்தை பார்த்து வியந்து போனேன், 19 வயது, 20 வயதில் இருப்பவர்கள் அவ்வளவு அருமையாக அந்த படத்தில் நடித்திருந்தார்கள். நான் ஏன் இன்னும் இது மாதிரி நடிக்கவில்லை என்ற பதட்டம் எனக்கு ஏற்பட்டது’ என்று பேசி உள்ளார் .

All Quiet on the Western Front என்ற படம் இன்று ஆஸ்கர் விருதுகளை அள்ளி குவித்து வரும் நிலையில் இந்த படம் குறித்து அன்றே கமல்ஹாசன் பேசியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.