மே 1ல் வெளியாகிறது அஜித்தின் சூப்பர் ஸ்பெஷல் படம்.. 'கில்லி' சாதனையை முறியடிக்குமா?

  • IndiaGlitz, [Wednesday,April 24 2024]

கடந்த சில மாதங்களாக பழைய திரைப்படங்கள் மீண்டும் புது பொலிவுடன் ரிலீஸ் ஆகி வருகின்றன என்பதும் அவற்றில் சில படங்கள் வசூலில் சாதனை செய்து வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம். குறிப்பாக விஜய், த்ரிஷா நடிப்பில் தரணி இயக்கத்தில் உருவான ’கில்லி’ திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் இந்த படம் புதிய திரைப்படங்களுக்கு இணையான ஓபனிங் வசூல் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வரும் மே ஒன்றாம் தேதி அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்த சூப்பர் ஸ்பெஷல் படமான ’பில்லா’ திரைப்படம் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பில்லா’ படத்தின் ரீமேக் படமான இந்த படம் அஜித்துக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம் என்பதும் இந்த படம் வெளியான போது வசூலிலும் சாதனை செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வரும் மே ஒன்றாம் தேதி ’பில்லா’ படம் புத்தம் புது பொலிவுடன் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் வசூலும் பிரம்மாண்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் ’கில்லி’ வசூலை விழா வசூல் முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அஜித், நயன்தாரா, ரகுமான், பிரபு, நமிதா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இந்த படத்தை விஷ்ணுவர்தன் இயக்கியிருந்தார். யுவன்ஷங்கர் ராஜா இசையில் இந்த படம் உருவாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

விஜய்சேதுபதியின் முக்கிய படத்தின் உரிமையை பெற்ற விஜய் டிவி.. விரைவில் ரிலீஸ்..!

ஒவ்வொரு நடிகருக்கும் 50வது படம் முக்கியமானது என்ற நிலையில் விஜய் சேதுபதியின் 50வது படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி பெற்றுள்ளதாக சற்றுமுன் அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

'குக் வித் கோமாளி' 5வது சீசனின் 10 குக்குகள் அறிமுகம்.. நாம் சொன்னது எல்லாமே சரியா இருக்கே..!

விஜய் டிவியில் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பிரமாண்டமாக ஐந்தாவது சீசன் வரும் 27ஆம் தேதி ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இந்த சீசனில் கலந்து கொள்ள இருக்கும் குக்குகள் குறித்த செய்திகள் கசிந்தது என்பதை

திரைப்படத்தில் கூறிய கருத்தை நிஜ வாழ்க்கையிலும் செய்து காட்டிய சேரன்.. மகள் திருமணத்தில் ஆச்சரியம்,.!

இயக்குனர் சேரன் தான் இயக்கிய 'திருமணம்' என்ற திரைப்படத்தில் கூறிய கருத்துக்களை தனது மகள் திருமணத்தில் செய்து காட்டிய நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

'இந்தியன் 2' சிங்கிள் பாடல் எப்போது? பாடலின் முதல் வரி இதுதானா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி வரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட

சென்னை ஸ்டார் ஹோட்டலில் அஜித்-ஷாலினி கொண்டாட்டம்.. ஒரு வாரத்தில் இன்னொரு விசேஷம் இருக்குது..!

சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் அஜித் - ஷாலினி தங்களது 24 வது திருமண நாளை கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.