close
Choose your channels

மே 1ல் வெளியாகிறது அஜித்தின் சூப்பர் ஸ்பெஷல் படம்.. 'கில்லி' சாதனையை முறியடிக்குமா?

Wednesday, April 24, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில மாதங்களாக பழைய திரைப்படங்கள் மீண்டும் புது பொலிவுடன் ரிலீஸ் ஆகி வருகின்றன என்பதும் அவற்றில் சில படங்கள் வசூலில் சாதனை செய்து வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம். குறிப்பாக விஜய், த்ரிஷா நடிப்பில் தரணி இயக்கத்தில் உருவான ’கில்லி’ திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் இந்த படம் புதிய திரைப்படங்களுக்கு இணையான ஓபனிங் வசூல் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வரும் மே ஒன்றாம் தேதி அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்த சூப்பர் ஸ்பெஷல் படமான ’பில்லா’ திரைப்படம் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பில்லா’ படத்தின் ரீமேக் படமான இந்த படம் அஜித்துக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம் என்பதும் இந்த படம் வெளியான போது வசூலிலும் சாதனை செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வரும் மே ஒன்றாம் தேதி ’பில்லா’ படம் புத்தம் புது பொலிவுடன் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் வசூலும் பிரம்மாண்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் ’கில்லி’ வசூலை விழா வசூல் முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அஜித், நயன்தாரா, ரகுமான், பிரபு, நமிதா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இந்த படத்தை விஷ்ணுவர்தன் இயக்கியிருந்தார். யுவன்ஷங்கர் ராஜா இசையில் இந்த படம் உருவாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.