close
Choose your channels

'வாரிசு' - 'துணிவு' : ரிலீசுக்கு முன் குவித்த கோடிகள் எவ்வளவு?

Sunday, January 8, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ’துணிவு’ மற்றும் விஜய் நடித்த ’வாரிசு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஜனவரி 11-ம் தேதி பொங்கல் விருந்தாக வெளியாக உள்ளது. இந்த இரண்டு படங்களின் டிரைலர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இரண்டு படங்களுமே வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

இந்த நிலையில் ’வாரிசு’ மற்றும் ’துணிவு’ ஆகிய இரண்டு படங்களும் ரிலீஸுக்கு முன்பே எவ்வளவு கோடிகள் வசூல் செய்துள்ளன என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது

வாரிசு படத்தின் பட்ஜெட் ரூ.225 கோடி

விஜய் சம்பளம்: 125 கோடி

மற்ற நட்சத்திரங்களின் சம்பளம் மற்றும் தயாரிப்பு செலவு ரூ.100 கோடி

ரிலீசுக்கு முந்தைய வசூல்:

தமிழக உரிமை: 70 கோடி ரூபாய்

கேரள உரிமை: 6.5 கோடி ரூபாய்

கர்நாடக உரிமை: 8 கோடி ரூபாய்

வெளிநாட்டு உரிமை: 35 கோடி ரூபாய்

ஹிந்தி உரிமை: 34 கோடி ரூபாய்

ஆடியோ உரிமை 10 கோடி ரூபாய்

டிஜிட்டல் உரிமை 75 கோடி ரூபாய்

சன் டிவி சாட்டிலைட் உரிமை: 57 கோடி ரூபாய்

வாரிசு திரைப்படத்தின் மொத்த வசூல் 295 கோடி ரூபாய்

மேலும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ’வாரிசு’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு சொந்தமாக ரிலீஸ் செய்ய இருப்பதாக செய்ய உள்ளார் என்பதால் அதன் தொகை இதில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்தின் துணிவு படத்தின் பட்ஜெட்: ரூ.160 கோடி

அஜித் சம்பளம்: ரூ.70 கோடி

மற்ற நட்சத்திரங்களின் சம்பளம் மற்றும் தயாரிப்பு செலவு: 90 கோடி ரூபாய்

ரிலீசுக்கு முந்தைய வசூல்:

தமிழ்நாட்டு உரிமை: 60 கோடி

கேரளா உரிமை 2.5 கோடி ரூபாய்

கர்நாடக உரிமை: 3.6 கோடி ரூபாய்

இந்தி உரிமை: 25 கோடி ரூபாய்

ஆடியோ உரிமை: 2 கோடி ரூபாய்

ஆந்திரா மற்றும் தெலுங்கானா உரிமை: 1.5 கோடி ரூபாய்

டிஜிட்டல் உரிமை 65 கோடி ரூபாய்

சாட்டிலைட் உரிமை 25 கோடி ரூபாய்

வெளிநாட்டு உரிமை (லைகா) 14 கோடி ரூபாய்

’துணிவு’ திரைப்படத்தின் ரிலீசுக்கு முந்தைய மொத்த வசூல் 193 கோடி ரூபாய்

மேற்கண்ட தகவல்கள் அதிகாரபூர்வமாக படங்களின் தயாரிப்பு தரப்பில் இருந்து அளித்த தகவல் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.