close
Choose your channels

அஜித்தின் 'துணிவு' படத்துடன் கனெக்சன் ஆன உதயநிதியின் 'மாமன்னன்'

Monday, September 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித்தின் ‘துணிவு’ படத்துடன் உதயநிதியின் ‘மாமன்னன்’திரைப்படம் கனெக்சன் ஆகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘துணிவு’. இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது என்பதும் இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளிவர அதிக வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் உதயநிதி நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாமன்னன்’படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உதயநிதி ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இந்த படத்தில் பகத் பாசில், வடிவேலு உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் ‘துணிவு’ மற்றும் ‘மாமன்னன்’ ஆகிய இரண்டு படங்களின் வியாபாரம் தற்போது தொடங்கி விட்டதாகவும் குறிப்பாக இந்த இரண்டு படங்களின் ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘துணிவு’ மற்றும் ‘மாமன்னன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதை அடுத்து அந்த ஓடிடியில் சப்ஸ்கிரைப் செய்தவர்களுக்கு மிகப்பெரிய விருந்து காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment