இந்த தடவை முடிவோட தான் போறாங்க.. மீண்டும் அஜர்பைஜான் செல்லும் 'விடாமுயற்சி' குழு..!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக அஜர்பைஜான் நாட்டில் நடந்தது என்பதும் சமீபத்தில் தான் படக்குழுவினர் சென்னை திரும்பினர் என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் 10 நாள் ஓய்வுக்கு பிறகு தற்போது மீண்டும் படக்குழுவினர் அஜர்பைஜான் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த முறை தொடர்ச்சியாக 70 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அனேகமாக இந்த முறை படப்பிடிப்பை முடித்துவிட்டு தான் திரும்புவோம் என்ற முடிவில் படக்குழுவினர் இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா பணிபுரிந்த நிலையில் இனி ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவை கவனிப்பார் என்று கூறப்படுகிறது. முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாக்கப்படும் ‘விடாமுயற்சி’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த படத்தை 2024 கோடை விடுமுறையில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
மகிழ் திருமேனி இயக்கத்தில், அனிருத் இசையில், லைக்கா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் அஜித் ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் ரெஜினா நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
![](https://1571723588.rsc.cdn77.org/anomusercomment.jpg)