'அஜித் 57' படத்தின் முக்கிய அப்டேட்

  • IndiaGlitz, [Tuesday,September 06 2016]

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால் நடித்து வரும் 'அஜித் 57' படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் தொடங்கி பல ஐரோப்பிய நாடுகளில் கடந்த 30 நாட்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் குழுவினர் ஐரோப்பிய நாடுகளின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளனர்.
ஒருமாத கால நீண்ட முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் இன்னும் இரண்டு வாரங்களில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
முதல்முறையாக அஜித்துடன் காஜல் அகர்வால் மற்றும் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷராஹாசன் ஆகியோர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இந்த படம் அடுத்த ஆண்டு வெளிவரவுள்ளது.

More News

'தொடரி' சென்சார் எப்போது?

தனுஷ் நடித்த 'தொடரி' படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முற்றிலும் முடிந்துவிட்ட நிலையில் இந்த படம் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது...

இளையதளபதியின் 60வது பட டைட்டில்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 60வது திரைப்படத்தின் டைட்டில் இன்று நள்ளிரவு சரியாக 12.01க்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததை பார்த்தோம்...

தேசிய விருது இயக்குனரின் அடுத்த படத்தில் சிம்பு?

கோலிவுட் திரையுலகின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவரும், தேசிய விருது பெற்றவருமான பாலா, சமீபத்தில் 'குற்றப்பரம்பரை' கதையை இயக்க திட்டமிட்டிருந்தார்...

'கபாலி' யோகியின் 'ராணி'க்கு நடந்த பூஜை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தில் அவருடைய மகள் 'யோகி' கேரக்டரில் நடித்த தன்ஷிகாவின் நடிப்புக்கு உலகம் முழுவதும் பாராட்டுக்கள் குவிந்து...

தடைகளை எதிர்கொண்டு பயணத்தை தொடரும் ஜிப்ரான் குழுவினர்

முதல் இரண்டு பாடல்களை இரண்டு நாடுகளில் வெளியிட்ட பின்னர் மூன்றாவது பாடலை மியான்மர் நாட்டில் வெளியிட ஜிப்ரான் குழுவினர்