close
Choose your channels

'அஜித் 57' படத்தின் முக்கிய அப்டேட்

Tuesday, September 6, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால் நடித்து வரும் 'அஜித் 57' படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் தொடங்கி பல ஐரோப்பிய நாடுகளில் கடந்த 30 நாட்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் குழுவினர் ஐரோப்பிய நாடுகளின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளனர்.
ஒருமாத கால நீண்ட முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் இன்னும் இரண்டு வாரங்களில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
முதல்முறையாக அஜித்துடன் காஜல் அகர்வால் மற்றும் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷராஹாசன் ஆகியோர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இந்த படம் அடுத்த ஆண்டு வெளிவரவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.