close
Choose your channels

50 வயது நடிகையுடன் பிரேக் அப்? அஜித் பட தயாரிப்பாளர் மகன் வீடியோ வைரல்..!

Monday, August 28, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் படத்தின் தயாரிப்பாளர் மகனான 38 வயது நடிகர் 50 வயது நடிகையுடன் டேட்டிங்கில் இருப்பதை உறுதி செய்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ ’வலிமை’ மற்றும் ’துணிவு’ ஆகிய படங்களை தயாரித்தவர் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர். இவருக்கு அர்ஜூன்கபூர் என்ற மகன் இருக்கும் நிலையில் அவர் சில பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் 38 வயதான அர்ஜுன் கபூர் தன்னை விட 12 வயது அதிகமான மலைக்கா அரோரா என்பவருடன் டேட்டிங் செய்து வருவதாக கூறப்பட்டது. ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற மலைக்கா அரோரா, அர்ஜுன் கபூர் இருவரும் லிவிங் டுகெதர் முறையில் வாழ்வதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் திடீரென கடந்த சில நாட்களாக இருவரும் பிரிந்து விட்டதாகவும் பிரேக்கப் ஆகிவிட்டதாகவும் கூறிவந்த நிலையில் தற்போது இருவரும் மீண்டும் இணைந்துள்ள வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

நேற்று மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அர்ஜுன் கபூர் மற்றும் மலைக்கா அரோகரா சேர்ந்து வந்த நிலையில் மீண்டும் அவர்கள் டேட்டிங்கில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.