நயன்தாராவின் ரீமேக் படத்தில் அஜீத்?

  • IndiaGlitz, [Thursday,November 05 2015]

'சிறுத்தை சிவா' இயக்கத்தில் அஜீத், ஸ்ருதிஹாசன் நடித்த 'வேதாளம்' திரைப்படம் வரும் 10ஆம் தேதி பிரமாண்டமாக ரிலீசாகவுள்ள நிலையில் அஜீத்தின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வலம்வந்து கொண்டிருக்கின்றது. ஏற்கனவே அஜீத்தின் அடுத்த படத்தை விஷ்ணுவர்தன் இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தில் அஜீத், 'ராஜ ராஜ சோழன்' கேரக்டரில் பிரபல எழுத்தாளர் பாலகுமாரனனின் வசனத்தில் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது அவர் 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தில் மம்முட்டி, நயன்தாரா, பேபி அங்கிதா (என்னை அறிந்தால்) மற்றும் பலர் நடித்துள்ளனர். இளையதளபதி விஜய் நடித்த 'ஃப்ரெண்ட்ஸ்', 'காவலன்' படங்களை இயக்கிய சித்திக் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில் இந்த படம் தமிழில் ரீமேக் செய்யப்படவுள்ளதாகவும், மம்முட்டி கேரக்டரில் அஜீத்தும், நயன்தாரா கேரக்டரில் நயன்தாராவும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சில வருடங்களாக தொடர்ந்து ஆக்சன் படங்களில் நடித்து வரும் அஜீத், ஒரு மாற்றத்திற்காக முழுக்க முழுக்க காமெடி படமான இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை. தற்போதைய நிலையில் சூப்பர் ஸ்டார் இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் அஜீத்தும், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் இணைந்தால், அந்த படம் மாபெரும் வெற்றியை பெறும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று கூறப்படுகிறது. அஜீத்தின் அடுத்த படம் ராஜராஜ சோழனா? அல்லது பாஸ்கர் தி ராஸ்கலா? என்பதை அறிய அஜீத் ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

More News

'வேதாளம்': அஜீத் உறவினர்களுக்காக சிறப்பு காட்சி

அஜீத் நடித்த 'வேதாளம்' திரைப்படம் வரும் தீபாவளி தினத்தில் உலகம் முழுவதும் பெருவாரியான திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது...

நடிகை ஆஸ்னா ஜாவேரியுடன் திருப்பதியில் திருமணமா? சந்தானம் மறுப்பு

'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்', இனிமே இப்படித்தான் படங்களில் ஜோடியாக நடித்த சந்தானம் மற்றும் ஆஸ்னா ஜாவேரி...

வெங்கட்பிரபுவின் அடுத்த 'சென்னை 28' இரண்டாம் பாகமா?

சூர்யா, நயன்தாரா நடித்த 'மாஸ்' என்ற படத்தை இயக்கிய இயக்குனர் வெங்கட்பிரபு தற்போது அடுத்த படத்திற்காக ஆரம்பகட்ட பணியை தொடங்கியுள்ளார்...

சூப்பர் ஸ்டார்களுடன் அடுத்தடுத்து இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்?

அருள்நிதி நடித்த 'மெளன குரு' படத்தின் இந்தி ரீமேக் படமான 'அகிரா' படத்தின் வசனக்காட்சிகளின் படப்பிடிப்புகளை ஏ.ஆர்.முருகதாஸ் முடித்துவிட்டதாகவும்...

கமல்-அமலா படத்தில் இணையும் இளம் ஹீரோயின்

உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகை அமலா நடிக்கவுள்ளதாகவும்...