close
Choose your channels

கமல்-அமலா படத்தில் இணையும் இளம் ஹீரோயின்

Wednesday, November 4, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகை அமலா நடிக்கவுள்ளதாகவும், இன்னொரு முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகை ஜரீனா வாஹப் நடிக்கவுள்ளதாகவும் வந்த செய்தியை நேற்று பார்த்தோம். இந்நிலையில் கமல்ஹாசன் இன்று அளித்த பேட்டி ஒன்றில் இந்த படத்தில் இன்னொரு இளம் ஹீரோயின் நடிக்கவுள்ளதாக பெயரை குறிப்பிடாமல் கூறியுள்ளார்.

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும், தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகவுள்ள இந்த படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர்களின் விபரங்கள் விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் அமெரிக்காவில் படமாக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கமல் கூறிய அந்த இளம் ஹீரோயின் யார்? என்ற கேள்வி தற்போது அனைவரின் மனதிலும் எழுந்துள்ள நிலையில், அந்த இளம் ஹீரோயின் தமன்னாவாக இருக்கலாம் என கூறப்படுகிறது. கமலுடன் இணைந்து நடிக்ககூடிய அதிர்ஷ்ட வாய்ப்பு யாருக்கு கிடைக்கவுள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.