close
Choose your channels

அஜித்தின் அடுத்த பட இயக்குனர் மாற்றப்பட்டாரா? உண்மை நிலை என்ன?

Wednesday, November 29, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’விடாமுயற்சி’ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அவருடைய அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை பிரபல தெலுங்கு திரையுலகின் மைத்ரி மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த செய்தி கிட்டத்தட்ட உண்மை என்று சமூக வலைதளங்களில் அஜித் தரப்பிலும் கசிந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக வேறு ஒரு தகவல் வெளியாகி கொண்டிருக்கின்றன.

சமூக ஊடகங்கள் மற்றும் வீடியோக்களில் தங்களை தாங்களே பத்திரிகையாளர்கள் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் சிலர் அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவில்லை என்றும் அவருக்கு பதிலாக தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் என்பவர் இயக்க இருப்பதாகவும் கூறினர்.

ஆனால் அஜித்தின் தரப்பிலிருந்து இந்த தகவல் மறுக்கப்பட்டுள்ளது. அஜித்தின் அடுத்த திரைப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இல்லை என்றும் இயக்குனர் மாற்றப்பட்டதாகவும் வெளி வந்திருக்கும் தகவல் தவறானது என்று அஜித்துக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர். இதனை அடுத்து அஜித்தின் அடுத்த திரைப்படத்தை இயக்குபவர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் என்பதை கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment