கிரிக்கெட் வீரர் பிறந்த நாளில் இன்ப அதிர்ச்சி கொடுத்த அஜித்.. வைரல் புகைப்படங்கள்..!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் நடிகர் அஜித் அந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழகத்தை சேர்ந்த நடராஜன் என்ற கிரிக்கெட் வீரர் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி உள்ளார் என்பதும் தற்போது ஐபிஎல் தொடரில் அவர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் விளையாடி வருகிறார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் நேற்று கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருந்த போது திடீரென அஜித் அந்த பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு நடராஜனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவர் பிறந்த நாள் கேக்கை கட் செய்து நடராஜனுக்கு ஊட்டினார் என்பதும் நடராஜனும் மிகவும் பாசத்துடன் அஜித்துக்கு கேக் ஊட்டிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
நடராஜன் அஜித்தின் தீவிர ரசிகர் என்று பல பேட்டிகளில் கூறியுள்ள நிலையில் அவருடைய பிறந்த நாளுக்கு சென்று வாழ்த்து தெரிவித்திருப்பது நிச்சயம் அவருக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்திருக்கும். அதே போல் அஜித்துக்கும் நடராஜன் பவுலிங் மிகவும் பிடிக்கும் என்று கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments