'வலிமை' நெகட்டிவ் விமர்சனங்களுக்கு அஜித் தரப்பு விளக்கம்: அன்று சொன்னதுதான் இன்றும்!

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் ஒரு பக்கம் குடும்ப ஆடியன்ஸ்களால் திரையரங்குகள் நிரம்பி 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படும் நிலையில் இன்னொரு பக்கம் ஒருசில யூடியூப் விமர்சகர்களால் படுமோசமாக இந்த படம் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அஜித் தரப்பு இது குறித்து விளக்கம் அளித்து பதிவு செய்துள்ள டுவிட் வைரலாகி வருகிறது.

அஜித்தின் ’வலிமை’ படத்தை ப்ளூ சட்டை மாறன் உட்பட ஒரு சிலர் படு மோசமாக விமர்சனம் செய்தனர். ’வலிமை’ படத்தை மட்டுமன்றி அவரது உடல் உருவத்தையும் விமர்சனம் செய்ததற்கு அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி நடுநிலை ரசிகர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்

மேலும் நடிகர் ஆரி, நடிகர் ஆர்கே சுரேஷ் உள்பட ஒருசிலர் ப்ளூ சட்டை மாறனை நேரடியாகவே தாக்கி பேசினார்கள். இந்த நிலையில் சினிமா விமர்சகர்களுக்கும் திரை உலகிற்கும் இடையே இது குறித்து பிரச்சினை பெரிதாக வாய்ப்பு இருப்பதை அறிந்த அஜித்தின் தரப்பு, கடந்த ஆண்டு வெளியிட்ட டுவிட்டை தற்போது மீண்டும் பதிவு செய்து நெகட்டிவ் விமர்சனங்களுக்கு விளக்கம் அளித்துள்ளது.

அஜீத்தின் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா பதிவு செய்துள்ள இந்த ட்விட்டில் கூறியிருப்பதாவது: ரசிகர்கள், நடுநிலையாளர்கள், வெறுப்பாளர்கள் மூவரும் ஒரு நாணயத்தின் மூன்று பக்கங்கள். ரசிகர்களிடமிருந்து வரும் அன்பையும், வெறுப்பாளர்களிடமிருந்து வரும் வெறுப்பையும், நடுநிலையாளர்களிடமிருந்து வரும் நடுநிலையான விமர்சனத்தையும் நான் மனமுவந்து ஏற்கிறேன். வாழு… வாழவிடு… எப்போதும் நிபந்தனையற்ற அன்புடன்’ என்று கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அஜித்தின் 30வது திரையுலக ஆண்டின்போது பதிவு செய்த டுவிட்டையே கூறி ‘வலிமை’ பிரச்சனைக்கும் அஜித் தரப்பு முற்றுப்புள்ளி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரசிகர்களை திக்குமுக்காட வைத்த நடிகை ஓவியா… வைரலாகும் நீச்சல் உடை புகைப்படம்!

“களவாணி“ திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஓவியா பிக்பாஸ் சீசன் ஒன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதனால்

அசத்தும் சிங்கப்பெண்… போர் பகுதியில் இருந்து 800 இந்திய மாணவர்களை மீட்ட 24 வயது பெண் பைலட்!

கடும் போர் நிகழும் உக்ரைன் பகுதியில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்த 800 இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்டுள்ளார்

புத்தக திருவிழாவில் திருடிய டிவி நடிகை கைது: 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

புத்தகத்திருவிழாவுக்கு வந்த பொதுமக்களின் பர்ஸ்களை திருடிய தொலைக்காட்சி நடிகை கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'தளபதி 66' படத்தில் இணைகிறாரா தனுஷ் நாயகி?

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 66ஆவது திரைப்படமான 'தளபதி 66' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஒருகாலத்தில் மூலையில் நின்று ஷூட்டிங் பார்த்தேன், இன்று அவருடனே நடித்தேன்: ஐஸ்வர்யா ராஜேஷ் பெருமிதம்

ஒரு காலத்தில் அவருடைய நடிப்பை மூலையில் நின்று வேடிக்கை பார்த்தேன் என்றும் இப்போது அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது பெருமையாக இருக்கிறது என்றும் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்