close
Choose your channels

ரசிகர்களை திக்குமுக்காட வைத்த நடிகை ஓவியா… வைரலாகும் நீச்சல் உடை புகைப்படம்!

Monday, March 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

“களவாணி“ திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஓவியா பிக்பாஸ் சீசன் ஒன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதனால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன்பக்கம் ஈர்த்துக்கொண்ட அவருக்கு ஆர்மி உருவாக்கப்பட்டு நெட்டிசன்களின் பாராட்டு மழையில் நனைந்ததும் நமக்கு தெரிந்ததே. இப்படி ஏராளமான ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை ஓவியா வெளியிட்டு இருக்கும் ஒரு புகைப்படம் தற்போது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

தமிழ், தெலுங்கு சினிமாவில் விரும்பப்படும் நடிகையாக இருந்துவரும் நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்ற நடிகையாக மாறிப்போனார். மேலும் சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக செயல்பட்டுவரும் அவர் தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களையும் அதில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது நீச்சல் உடையணிந்து நடிகை ஓவியா கடற்கரையில் குதூகலமாக விளையாடும் புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இந்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் கடும் ஆச்சர்யத்தை வெளியிட்டு வருகின்றனர். முன்னதாக “களவாணி“, “மெரினா“ போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுவந்த இவர் தற்போது வெப் சீரிஸ்களிலும் கவனம் செலுத்தத் துவங்கியிருக்கிறார். இந்த நிலையில்தான் அவருடைய நீச்சல் உடை புகைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காட வைத்திருக்கிறது.

மேலும் நடிகை ஓவியா “Scam“ எனும் தெலுங்கு திரைப்படத்திலும் “Daandiga“ எனும் கன்னடத் திரைப்படத்திலும் “ராஜ பீமா”, “கான்ட்ராக்டர் நேசமணி“ போன்ற ஒரு சில தமிழ் திரைப்படங்களில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.