'வலிமை' புதிய அப்டேட்: அஜித் ரசிகர்கள் அப்செட்

  • IndiaGlitz, [Friday,April 23 2021]

அஜித் நடித்த ‘வலிமை’ படத்தின் அப்டேட்டை ஒரு ஆண்டுக்கு மேலாக அஜித் ரசிகர்கள் கேட்டு கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பதும் முதல்வர், பிரதமர் உட்பட பலரிடமும் இந்த அப்டேட்டை கேட்டு வருகின்றனர் என்பதும் தெரிந்ததே

இதனை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் ‘வலிமை’ படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் அவர்கள் ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மே ஒன்றாம் தேதி அஜித்தின் பிறந்த நாள் அன்று வெளியாகும் என்று தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: எங்கள் நிறுவனத்தின் சார்பில் நாங்கள் கொடுத்த முந்தைய அறிக்கையில் வருகின்ற மே 1ம் தேதி அஜித் குமார் அவர்களின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நடிப்பில், வினோத் இயக்கத்தில், எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடுவதாக அறிவித்து இருந்தோம்

இந்த அறிவிப்பு வெளிவரும் வரை கொரோனா இரண்டாவது அலை வரும் என்றும் அதன் தாக்கம் சுனாமி போல் தாக்கும் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இந்த தருணத்தில் தேசமெங்கும் எண்ணற்றோர் பொருளாதாரம் இழந்து, உற்றார் உறவினர் உயிரிழந்து, நோய் பற்றிய பீதியிலும் அதிர்ச்சியில் ஆழ்ந்து இருக்கின்றனர். இத்தகைய அசாதாரண சூழ்நிலையில் இப்படத்தில் நடித்துள்ள கலைஞர்கள் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து எடுத்த முடிவின்படி ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றுமொரு தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து அனைவரின் நலனுக்காகவும் பாதுகாப்புக்காகவும் பிரார்த்திப்போம் என்று கூறப்பட்டுள்ளது

போனிகபூரின் இந்த அறிக்கை அஜித் ரசிகர்களை அப்செட் ஆகி உள்ளது
 

More News

பட்டுப் புடவையில் ஜொலிக்கும் சிரிப்பழகி நடிகை… வைரல் புகைப்படம்!

90 கிட்ஸ்கள் மத்தியில் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை சினேகா. இவரது சிரிப்பில் மயங்கிப்போன ரசிகர்கள்

இணையத்தை கலக்கும் நிதி அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

கடந்த பொங்கல் தினத்தில் திரையரங்குகளில் வெளியான 'ஈஸ்வரன்' மற்றும் ஓடிடியில் வெளியான 'பூமி' ஆகிய இரண்டு படங்களில் நாயகியாக நடித்தவர் நடிகை நிதிஅகர்வால் 

சிங்கமா இருந்தாலும் சிங்கத்துக்கு வயசாயிடுச்சே: தோனி குறித்து விமர்சனம்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரில் நாளை சென்னை மற்றும் பெங்களூர் அணி மோதவுள்ளது. முதல் இரண்டு இடங்களில் மாறி மாறி சென்னை, பெங்களூரு

இன்னொரு சித்ராவாக நான் மாறிவிடக்கூடாது: சீரியல் நடிகையில் அதிர்ச்சி பேட்டி!

சின்னத்திரை நடிகை ஜெனிபர் என்பவர் தனக்கு சித்ராவின் நிலைமை வந்து விடக் கூடாது என்பதற்காக நியாயம் கேட்டு வந்திருக்கிறேன் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட பர்ஸ்ட்லுக் போஸ்டர்: இணையத்தில் வைரல்

அசோக் செல்வன் மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்