அஜித், விஜய்யுடன் நடித்த மந்த்ராவை ஞாபகம் இருக்கா? கணவர், குழந்தையுடன் க்யூட் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Sunday,April 02 2023]

அஜித், விஜய் உள்பட பல பிரபலங்களுடன் நடித்த நடிகை மந்த்ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

தெலுங்கு சினிமாவில் ராசி என்ற பெயரில் தமிழ் சினிமாவில் மந்த்ரா என்ற பெயரில் நடித்தவர் நடிகை மந்த்ரா. இவரது உண்மையான பெயர் விஜயா. ஆந்திராவை சேர்ந்த இவர் தமிழில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்த ‘பிரியம்’ என்ற திரைப்படத்தில் 1996 ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு விஜய் நடித்த ’லவ் டுடே’ அஜித் நடித்த ’ரெட்டை ஜடை வயசு’ பிரபு நடித்த ’தேடினேன் வந்தது’ உட்பட பல திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார்

கடந்த 2005ஆம் ஆண்டு இயக்குனர் ஸ்ரீஹர்ஷா என்பவரை திருமணம் செய்து கொண்ட பின் அவர் நடிப்பில் இருந்து கிட்டத்தட்ட விலகினார். அதன் பிறகு அவர் சில ஆண்டுகள் கழித்து ’சுயேட்சை எம்எல்ஏ’ ’ஒன்பதுல குரு’, ‘வாலு’, ‘கவலை வேண்டாம்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை மந்த்ராவுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது என்பதும் இந்த குழந்தை குறித்த புகைப்படங்களை அவ்வப்போது அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வரும் நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

More News

மனைவியின் நிறை மாத கர்ப்பத்தை பார்ட்டி வைத்து கொண்டாடிய 'துணிவு' பட நடிகர்..!

அஜித் நடித்த 'துணிவு' திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் ஒருவரின் மனைவி தற்போது நிறைமாத கர்ப்பிணி ஆக இருக்கும் நிலையில் அதை கொண்டாடும் வகையில் பார்ட்டி வைத்துள்ளார்.

இதுபோல என்கிட்ட 100 கதை இருக்குது.. 'விடுதலை' படம் குறித்து இயக்குனர் மோகன் ஜி..!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான 'விடுதலை' திரைப்படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இது போன்ற கதை என்னிடம் 100 இருக்கிறது என சமீபத்தில் வெளியான 'பகாசூரன்

ஒரு புது கனவு எனக்கு உருவாகி இருக்கிறது: அம்பானி அரங்கம் குறித்து ரஜினிகாந்த் டுவிட்..!

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான அரங்கம் ஒன்று மும்பையில் திறக்கப்பட்டுள்ள நிலையில் அந்த திறப்பு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகளுடன் கலந்து கொண்டார்

பெருமிதத்தால் கண்ணீர் சிந்தினேன்… பிரியங்கா சோப்ரா வெளியிட்ட வைரல் பதிவு!

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி துவங்கியிருக்கும் புதிய கலாச்சார மையத்தின் துவக்க விழா மும்பையில் நடைபெற்றது.

ரிசர்வ் வங்கி ஊழியர்கள் சினிமா பார்க்காதீர்கள்: நயன்தாரா பட இயக்குனரின் சர்ச்சை பதிவு..!

சினிமாவுக்கு லோன் வழங்காத ரிசர்வ் வங்கி ஊழியர்கள் இனி சினிமாவை பார்க்க வேண்டாம் என இயக்குனர் ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.