close
Choose your channels

என்.டி.ஆர் பாலகிருஷ்ணாவின் அடுத்த படத்தில் அஜித், விஜய் பட நடிகை.. அதிரடி அறிவிப்பு..!

Tuesday, March 21, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 40 ஆண்டுகளாக தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகராக இருந்து வரும் என்டிஆர் பாலகிருஷ்ணா நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் அஜித், விஜய் ஜோடியாக நடித்த நடிகை நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

என்டிஆர் பாலகிருஷ்ணா நடித்த ’வீரசிம்ஹ ரெட்டி’ என்ற திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியானது என்பதும் இந்த படம் 130 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் என்.டி.ஆர். பாலகிருஷ்ணாவின் 108 ஆவது படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்தை அனில்ரவிபுடி என்பவர் இயக்க இருக்கிறார் என்பதும் அறிவிக்கப்பட்டது.

தமன் இசையமைக்கும் இந்த படத்தில் ஏற்கனவே என்டிஆர் பாலகிருஷ்ணாவின் மகளாக ஸ்ரீ லீலா என்ற நடிகை நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது என்டிஆர் ஜோடியாக நடிக்கும் நடிகை குறித்து அறிவிப்பை இயக்குனர் அனில்ரவிபுடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் என்டிஆர் பாலகிருஷ்ணா ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் நடித்த ’விவேகம்’ விஜய் நடித்த ’துப்பாக்கி’ ’ஜில்லா’உள்பட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுடன் நடித்த காஜல் அகர்வால் தற்போது என்டிஆர் பாலகிருஷ்ணன் உடன் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment