நேற்று 'ஜெயிலர்' நடிகருடன், இன்று 'லியோ' பட வில்லனுடன்.. அஜித்தின் மாஸ் புகைப்படம் வைரல்..!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த மோகன்லாலுடன் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆன நிலையில் இன்று விஜய்யின் ‘லியோ’ திரைப்படத்தில் வில்லனாக நடித்த சஞ்சய் தத் உடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே அஜித்தின் அடுத்த படமான ’விடாமுயற்சி’ திரைப்படத்தில் சஞ்சய் தத் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் குறிப்பாக வில்லன் கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் கசிந்து வருகின்றன. இந்த நிலையில் அஜித்துடன் சஞ்சய்தத் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.
மேலும் ‘விடாமுயற்சி’ படத்தில் சஞ்சய்தத் மட்டுமின்றி ’லியோ’ படத்தில் நடித்த இன்னொரு முக்கிய நடிகர் அர்ஜுன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் ‘விடாமுயற்சி’ படக்குழுவினர் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டால் மட்டுமே இந்த தகவல் உறுதி செய்யப்படும்.
இந்த நிலையில் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பை தொடங்க இயக்குனர் மகிழ் திருமேனி ஆரம்ப கட்ட பணிகளை செய்து வருவதாகவும் அடுத்த மாதம் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments