த்ரிஷா, நயன்தாரா ரெண்டு பேருமே இல்ல.. இவர்தான் 'ஏகே 62' நாயகி?

  • IndiaGlitz, [Thursday,January 05 2023]

அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான ’ஏகே 62’ என்ற படத்தில் நாயகியாக நயன்தாரா நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திடீரென த்ரிஷா நடிப்பார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் த்ரிஷாவும் இல்லை, நயன்தாராவும் இல்லை, இந்த படத்தின் நாயகி இவர்தான் என தகவல்கள் கசிந்துள்ளன.

அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படம் வரும் 11ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’ஏகே 62’ படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 17ஆம் தேதி முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

அஜீத் ஜோடியாக இந்த படத்தில் காஜல் அகர்வால் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. காஜக் அகர்வால் ஏற்கனவே அஜித்துடன் ‘விவேகம்’ என்ற படத்தில் நடித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் அஜித்துடன் இணைய உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாக இருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தின் பாடல்களை கம்போஸ் செய்யும் பணியை அவர் விரைவில் தொடங்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

More News

பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த படம்.. இயக்குனர் பெயர் அதிகாரபூர்வ அறிவிப்பு!

 பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அருண்ராஜா காமராஜ் அடுத்த படத்தின் நாயகன், நாயகி குறித்த தகவல்!

தமிழ் திரை உலகில் பிரபல பாடகர் மற்றும் பாடல் ஆசிரியராக அறிமுகமான அருண்ராஜா காமராஜ் சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்த 'கனா' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனரானார் என்பதும் அந்த

காதலை வெளிப்படுத்த பயப்பட வேண்டாம்.. கிருத்திகா உதயநிதி டுவிட்டுக்கு என்ன அர்த்தம்?

காதலை வெளிப்படுத்த பயப்படவேண்டாம் என்றும் இயற்கையின் மகிமைகளில்  அதுவும் ஒன்று என்றும் கிருத்திகா உதயநிதி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் தற்போது அந்த டுவிட் வைரலாகி வருகிறது.

ரஜினிக்கு ஹீரோவாகும் தகுதி இல்லை; நண்பர் எழுதிய புத்தகத்தில் ஆச்சரிய தகவல்!

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரும் கன்னட நடிகருமான அசோக் என்பவர் ரஜினி குறித்து எழுதிய புத்தகத்தில் ரஜினிக்கு ஹீரோவாகும் தகுதி இல்லை என்று எழுதி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹங்கேரியில் தொழில்நுட்ப பணிகள்.. சமந்தாவின் அடுத்த படம் குறித்த ஆச்சரிய தகவல்!

 சமந்தா நடித்த 'யசோதா' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் நடித்து முடித்துள்ள அடுத்த திரைப்படமான 'சாகுந்தலம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து