close
Choose your channels

பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த படம்.. இயக்குனர் பெயர் அதிகாரபூர்வ அறிவிப்பு!

Thursday, January 5, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான 'சர்தார்’ திரைப்படம் கடந்த தீபாவளியன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து தற்போது ஆர்ஜே பாலாஜி நடிக்கும் ’ரன் பேபி ரன்’ என்ற படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள நிலையில் இந்த படம் பிப்ரவரியில் ரிலீசாக உள்ளது.

இந்த நிலையில் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தை ’கொலைகாரன்’ மற்றும் ’வதந்தி’ ஆகிய படங்களை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸ் என்பவர் இயக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய படத்தின் ஒப்பந்தத்தின் போது எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக எனது அடுத்த படத்தை இயக்க இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்றும் புத்தாண்டில் ஒரு புதிய ஆரம்பம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.