உலக சாதனை செய்தது எனது முதல் படம். கமல் மகள் பெருமிதம்

  • IndiaGlitz, [Sunday,May 14 2017]

தல அஜித் நடித்துள்ள 'விவேகம்' திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் இந்த டீசர் வெளியான மூன்று நாட்களில் ஒரு கோடி பார்வையாளர்களை பெற்று உலக சாதனை செய்துள்ளது. இந்த கொண்டாட்டத்தை அஜித் ரசிகர்கள் மிகப்பெரும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள கமல்ஹாசனின் இளைய மகள் அக்சராஹாசன் தனது டுவிட்டரில் இதுகுறித்து கூறியபோது, 'நான் நடித்த புதிய திரைப்படமான 'விவேகம்' படத்தின் டீசர் உலக சாதனைகளை தகர்த்துள்ளது அறிந்து பெருமிதம் கொள்கிறேன். இந்த சாதனையை செய்ய உதவிய அனைவரும் நன்றி' என்று கூறியுள்ளார்.

அஜித்தின் முந்தைய படமான 'வேதாளம்' படத்தில் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் நடித்திருந்த நிலையில், 'விவேகம்' படத்தில் அவருடைய இரண்டாவது மகள் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் இந்த படம் அக்சராஹாசனின் முதல் தமிழ்ப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

சென்னையில் முதல் சுரங்க மெட்ரோ ரயில் தொடங்கியது

சென்னையில் திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரையிலான 7.4 கிலோ மீட்டர் தூர  சுரங்கப்பாதையில் அமைக்கப்பட்ட மெட்ரோ ரயில் பயணிகள் சேவை இன்று தொடங்கியது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு ஆகியோர் இந்த சுரங்கப்பாதையை திறந்து வைத்தனர்...

தமிழக மக்கள் தொகையில் 8ல் ஒன்று. விவேகம் செய்த மகத்தான் சாதனை

தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கியுள்ள 'விவேகம்' படத்தின் டீசர் கடந்த 11ஆம் தேதி வெளிவந்து உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு முந்தைய 'கபாலி' சாதனை உள்பட பல சாதனைகளை பார்வையாளர்கள் எண்ணிக்கையிலும், லைக்ஸ்களிலும் உடைத்தெறிந்தது...

பாடகி சுசிலீக்ஸ் விவகாரம்: சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார்

கடந்த பிப்ரவரி மாதம் பிரபல பின்னணி பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு அதில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர், நடிகைகளின் அந்தரங்க படங்கள், வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது...

விஷாலின் 'இரும்புத்திரை' வில்லனாக சர்வதேச பிரபலம்

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய 'துப்பறிவாளன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் தற்போது விஷால் 'இரும்புத்திரை' படத்தின் படப்பிடிப்பில் உள்ளார்.

ரஜினிக்கு வந்த மிரட்டல் குறித்து தமிழிசை செளந்தரராஜன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகவுள்ள 'ரஜினி 161' திரைப்படத்தின் படப்பிடிப்பு வெகுவிரைவில் தொடங்கவுள்ளது.