விமான நிலையத்தில் வாய்ப்பு கேட்ட ஹீரோயின்! கதாநாயகியாக மாற்றிய ராஜமௌலி!

  • IndiaGlitz, [Wednesday,April 24 2019]

இயக்குனர் ராஜமவுலியை, விமான நிலையத்தில் சந்தித்த போது வாய்ப்பு கேட்டதாக நடிகை ஆலியாபட் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் ராஜமௌலி, 'பாகுபலி' படத்தின் மெகாஹிட் வெற்றிக்கு பிறகு, தற்போது 'ஆர் ஆர் ஆர்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் தெலுங்கு முன்னணி ஹீரோக்களான ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் தேஜா ஆகியோர் கதாநாயகனாக நடித்து வருகின்றனர்.

வரலாற்று சிறப்புமிக்க படமாக எடுக்கப்படும், இந்த படத்தில் அல்லூரி சித்தராம ராஜு மற்றும் கோமராம் பீம் ஆகிய இரண்டு, தேச விடுதலைப் போராட்ட வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து படமாக்கி வருகிறார் ராஜமௌலி.

மேலும் நடிகை ஆலியா பட் கதாநாயகியாக நடிக்கிறார். அஜய் தேவ்கன், மற்றும் நடிகர் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர் .

இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது குறித்து முதல்முறையாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார் நடிகை ஆலியா பட். இதுகுறித்து அவர் கூறுகையில்... இயக்குனர் ராஜமௌலி இயக்கிய பாகுபலி படத்தை பார்த்தபின், அவருடைய இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆவல் ஏற்பட்டது. ஒருமுறை அவரை விமான நிலையத்தில் சந்தித்த போது, அவருடைய படத்தில் சிறு வேடத்திலாவது நடிக்க வேண்டும் என தானாகவே முன்வந்து வாய்ப்பு கேட்டேன். ஆனால் அவர் தற்போது இயக்கி வரும் 'ஆர் ஆர் ஆர்' படத்தில், கதாநாயகியாக வாய்ப்பு கொடுத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது என கூறியுள்ளார்.

More News

பிரபல காமெடி நடிகர் வீட்டில் கைவரிசை: 41 சவரன் நகைகள் கொள்ளை

கோலிவுட் திரையுலகில் காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் இமான் அண்ணாச்சி, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் 'சொல்லுங்கய்யா சொல்லுங்க'

'ஜாம்பி'யில் யோகிபாபுவுக்கு ஜோடியா யாஷிகா?

காமெடி நடிகர் யோகிபாபு, 'ஜாம்பி' திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் அவருடன் கவர்ச்சி நடிகை யாஷிகா நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே.

தளபதி 63: பெண்கள் கால்பந்து அணியில் யார் யார்?

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கி வரும் 'தளபதி 63' திரைப்படம் பெண்கள் கால்பந்து போட்டியை மையமாக வைத்து உருவாகி வரும் படம் என்பது தெரிந்ததே.

தமிழக முதல்வருடன் டி.ராஜேந்தர் சந்திப்பு!

நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தர், தனது இளையமகன் குறளரசனின் திருமணத்திற்காக திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்களை சந்தித்து அவர்களுக்கு திருமண அழைப்பிதழை வழங்கி வருகிறார் என்பது தெரிந்ததே.

வீண்போகாத தோனியின் நம்பிக்கை: அடிச்சு தூக்கிய வாட்சன்!

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியின் இறுதி போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி விளையாடியபோது அபாரமாக சதமடித்து சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டம் பெற பெரிதும் காரணமாக இருந்தவர் ஷேன் வாட்சன்.