close
Choose your channels

தளபதி 63: பெண்கள் கால்பந்து அணியில் யார் யார்?

Wednesday, April 24, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கி வரும் 'தளபதி 63' திரைப்படம் பெண்கள் கால்பந்து போட்டியை மையமாக வைத்து உருவாகி வரும் படம் என்பது தெரிந்ததே. பொதுவாக தமிழில் ஸ்போர்ட்ஸ் சம்பந்தப்பட்ட கதையம்சம் கொண்ட படம் என்றாலே வெற்றி உறுதி என்ற நிலையில் இந்த படத்தில் விஜய் நடித்துள்ளதால் வெற்றிக்கான கேள்வியே எழவில்லை.

இந்த நிலையில் விஜய் இந்த படத்தில் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக நடித்து வரும் நிலையில் கால்பந்து அணியின் வீராங்கனைகளாக நடித்து வரும் நடிகைகள் குறித்த செய்தி அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றது.

இதுவரை வெளிவந்துள்ள தகவலின்படி இந்த படத்தில் இடம்பெறும் பெண்கள் கால்பந்து அணியின் வீராங்கனைகளாக இந்துஜா, ரெபா மோனிகா ஜான், ஆத்மிகா, ரோபோ சங்கரின் மகள், '96' படத்தில் விஜய்சேதுபதியின் மாணவியாக நடித்த வர்ஷா பொல்லாம்மா ஆகியோர் நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் பெண்கள் கால்பந்து அணியில் கோல்கீப்பருடன் மொத்தம் 11 வீராங்கனைகள் உண்டு என்பதால் இன்னும் ஐந்து வீராங்கனைகள் மற்றும் கோல்கீப்பர் வேடத்தில் நடிப்பது யார் என்பது குறித்த தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் அக்காவாக தேவதர்ஷினி ஆகியோர்களும் நடிப்பதால் இந்த படத்தில் குறைந்தது பதினைந்து நடிகைகள் இடம்பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. நடிகைகளின் பட்டாளங்களுடன் தளபதி விஜய் கலக்கும் இந்த படம் நிச்சயம் ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்தாக இருக்கும் என கருதப்படுகிறது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.