5 வருடமாக நடத்தப்பட்ட சூட்டிங்… பிரம்மாண்ட திரைப்படம் குறித்த முக்கிய அப்டேட்!

பாலிவுட்டில் பிக்-பி என அழைக்கப்படும் நடிகர் அமிதாப்பச்சன், தெலுங்கு ஸ்டார் நடிகர் நாகார்ஜுனா மற்றும் ரியல் காதல் ஜோடிகளான ரன்பீர் கபூர், ஆலியா பட் ஆகியோர் இணைந்து நடித்துவந்த “பிரம்மாஸ்திரா“ திரைப்படத்தின் படப்பிடிப்பு 5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நிறைவடைந்து இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

பாலிவுட்டின் முன்னணி இயக்குநர் அயன் முகர்ஜி இயக்கத்தில் ஃபாக்ஸ் ஸ்டார் மற்றும் கரண் ஜோஹர் இணைந்து தயாரித்துள்ள பிரம்மாண்ட திரைப்படம் “பிரம்மாஸ்திரா“. 300 கோடி பட்ஜெட்டில் உருவாக்கியுள்ள இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. 3 பாகமாக வரவுள்ள இந்த பிரம்மாண்ட திரைப்படத்தின் முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு கடந்த 2018 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நிலையில் அதன் முதல் திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிவரும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் படப்பிடிப்பு நிறைவடையாத நிலையில் அதற்கான வெளியீட்டுத் தேதியும் தள்ளிப்போனது. இந்நிலையில் 5 வருடங்களாக நடைபெற்ற முதல் பாகத்தின் படப்பிடிப்பு நேற்று காசியில் நிறைவடைந்துவிட்டதாக இயக்குநர் அயன் முகர்ஜி மற்றும் அந்தப் படத்தின் ஹீரோயின் ஆலியா பட் ஆகியோர் தங்களது சமூகவலைத் தளங்களில் அறிவித்துள்ளனர். இதையடுத்து “பிரம்மாஸ்திரா“ திரைப்படம் வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி திரைக்கு வரும் எனவும் படக்குழு சார்பாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

நிஜத்தில் காதல் ஜோடிகளான ரன்பீர் கபூர் மற்றும் ஆலியாபட் இருவரும் தாங்கள் ஒன்றாக இணைந்து நடித்திருக்கும் “பிரம்மாஸ்திரா“ திரைப்படம் குறித்து ஏற்கனவே உற்சாகத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் வரும் செப்டம்பரில் இந்தத் திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. இதனால் இந்தப் படத்தின் நிறைவு குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றன.

More News

பீச்சில் பிகினி, அரபிக்குத்து பாடலுக்கு செம ஆட்டம்: வேற லெவலில் பிரபலமாகும் 'பேச்சிலர் நாயகி!

ஜிவி பிரகாஷ் நடித்த 'பேச்சிலர்' படத்தின் நாயகியான திவ்யபாரதி அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக வலம் வருகிறார். தினந்தோறும் அவர் பதிவு செய்யும்

ராஷ்மிகா மந்தனாவின் வேற லெவல் வொர்க்-அவுட் வீடியோ: இணையத்தில் வைரல்!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனாவின் வேற லெவல் ஒர்க் அவுட் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது

கே.ஜி.எப்-2 படத்தில் நடித்துள்ள முக்கிய தமிழ் நடிகர் பற்றி தெரியுமா? வைரல் தகவல்!

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் கே.ஜி.எப்-2 திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே

இறுதிக்கட்டத்தில் 'மாநாடு' தயாரிப்பாளரின் அடுத்த படம்: விரைவில் ரிலீஸ்

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான 'மாநாடு' என்ற வெற்றி படத்தை தயாரித்தவர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. இவர் தற்போது நிவின்பாலி, சூரி நடிப்பில் இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகி

நிச்சயதார்த்த வீடியோவை வெளியிட்ட நிக்கி கல்ராணி:க்யூட் ரொமான்ஸ் காட்சிகள்!

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நிக்கி கல்ராணி மற்றும் நடிகர் ஆதியின் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்தது என்பதும் இரு வீட்டார் கலந்துகொண்ட