நிர்பயா குற்றவாளிகளுக்கு நிறைவேற்றப்பட்டது தூக்கு தண்டனை: 7 வருட சட்டப்போராட்டத்திற்கு முடிவு

டெல்லி மருத்துவ கல்லூரி மாணவியான நிர்பயா, கடந்த 2012ஆம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் குற்றவாளிகள் நால்வருக்கும் சற்றுமுன் தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து நிர்பயா தாயாரின் 7 வருட சட்டப்போராட்டத்திற்கு முடிவு கிடைத்துள்ளது.

தூக்கு தண்டனையில் இருந்து தப்பிக்க நேற்று நள்ளிரவு கூட குற்றவாளிகளின் தரப்பில் இருந்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு அனைத்து சட்ட வழிகளும் மூடப்பட்டதால் திட்டமிட்டபடி இன்று அதிகாலை 5.30 மணிக்கு குற்றவாளிகளான  அக்சய் குமார் சிங், வினய் குமார் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய நால்வரும் தூக்கிலிடப்பட்டனர். அவர்களுடைய உடல் அரை மணி நேரம் தூக்கிலிடப்பட்டதாகவும் அதன்பின் நால்வரும் மரணம் அடைந்ததை மருத்துவர்கள் உறுதி செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

முன்னதாக 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதும் திஹார் சிறையின் முன் கூடியிருந்த நூற்றுக்கணக்கானோர் கைதட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

வெயில்ல போய் நில்லுங்க.. வைரஸ் செத்துவிடும்..! மத்திய சுகாதார இணை அமைச்சர் சர்ச்சை.

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினிகுமார் சௌபே வெயிலில் 2 மணி நேரம் நிற்கும் போது உடலில் உருவாக்கும் விட்டமின் டி வைரசைக் கொல்லும் என தெரிவித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

கொரோனா வைரஸ் எதிரொலி: திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடல்

திருப்பதி ஏழுமலையான் கோவில் இன்று முதல் மூடப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா: பலி எண்ணிக்கை நான்காக உயர்ந்ததால் பரபரப்பு

உலகம் முழுவதும் மனித இனத்தையே அழித்து வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் தாக்கி, ஏற்கனவே மூன்று உயிர்களை பலி வாங்கிய நிலையில்,

நடக்கக்கூட இடமில்லாத ரங்கநாதன் தெருவில், கிரிக்கெட் விளையாடிய ஊழியர்கள்

சென்னையின் பிஸியான இடங்களில் மிகவும் முக்கியமானது தி நகர் ரங்கநாதன் தெரு. இந்த தெருவில் தான் முக்கிய ஜவுளி கடைகள் மற்றும் நகைக் கடைகள் இருப்பதாலும்

நாசா விஞ்ஞானியாக நடிக்கும் பிரபல தமிழ் நடிகர்!

கோலிவுட் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி தனது அடுத்த படத்தில் நாசா விஞ்ஞானியாக நடித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது