close
Choose your channels

பிரபல தமிழ் தயாரிப்பாளர், இயக்குனருடன் இணைகிறாரா அல்லு அர்ஜூன்?

Thursday, July 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழின் முன்னணி நடிகர்கள் தெலுங்கு திரை உலகின் மார்க்கெட்டை பிடிப்பதற்கும், தெலுங்கின் முன்னணி நடிகர்கள் தமிழ் திரையுலகின் மார்க்கெட்டை பிடிப்பதற்கும் கடந்த சில ஆண்டுகளாக முயற்சித்து வருகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே மகேஷ்பாபு, ராம் சரண்தேஜா ஆகியோரின் படங்கள் தமிழ், தெலுங்கு என்று கடந்த சில ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் அல்லு அர்ஜுன் நடிக்கும் அடுத்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பான் இந்தியத் திரைப்படமாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது

அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்தை தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரிக்க உள்ளதாகவும், இந்த படத்தை கோலிவுட்டின் முன்னணி இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் தயாராக உள்ள இந்த படத்தின் அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது

ஏற்கனவே தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தணு அவர்கள் தெலுங்கு தயாரிப்பாளர் சுரேஷ் பாபு உடன் இணைந்து ’அசுரன்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ’நாரப்பா’ என்ற படத்தை தயாரித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இதனையடுத்து அவர் மேலும் ஒரு தமிழ் தெலுங்கு ஹிந்தி படத்தை தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.