எங்கள் வீட்டின் மகாராணி: பாட்டி மறைவு குறித்து ஜிவி பிரகாஷ்!

  • IndiaGlitz, [Monday,December 28 2020]

ஆஸ்கார் நாயகன், இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்களின் தாயார் கரீமா பேகம் அவர்கள் சற்று முன்னர் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி திரை உலகையே வருத்தமடையச் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

திரையுலக பிரபலங்கள் உள்பட பலரும் ஏஆர் ரஹ்மான் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் பிரபலங்களும் ஏஆர் ரஹ்மான் அவர்களின் தாயார் மறைவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஏஆர் ரஹ்மான் அவர்களின் தாயார் கரீமா பேகம் அவர்கள் பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்களின் பாட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது. தனது பாட்டியின் மறைவு குறித்து ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டரில் ’அவர் எப்போதுமே எங்களுடைய மகாராணி’ என்று குறிப்பிட்டு கரீமா பேகம் அவர்கள் மகாராணி போன்று உட்கார்ந்து இருக்கும் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படத்தை அடுத்து ஜீவி பிரகாஷின் ரசிகர்கள் அவருக்கு ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'மாஸ்டர்' படத்தின் மாஸ் அப்டேட்: ஸ்தம்பித்த சமூக வலைத்தளங்கள்!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம்

வெற்றிமாறன் படத்தில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்… காரணம் என்ன???

தமிழ் சினிமாவில் காமெடி நட்சத்திரமாக வலம் வரும் சூரி முதல் முதலாக வெற்றிமாறன் இயக்கத்தில் நாயகனாக அறிமுகமாகிறார்.

உலகில் இதுவே முதல்முறை… தஞ்சை மாணவனைப் பார்த்து பிரமித்துப்போன  நாசா!!!

தஞ்சையைச் சேர்ந்த இளம் மாணவர் ஒருவர் உருவாக்கிய சாட்டிலைட் மாடல்களைப் பார்த்து நாசா விஞ்ஞானிகளே அதிர்ந்து போயுள்ளனர்.

பிக்பாஸ் வீட்டில் நாளை முதல் ஃப்ரீஸ் டாஸ்க்: யார் யாருக்கு எந்த பாடல்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்களின் உறவினர்கள் போட்டியாளர்களை சந்திக்கும் நிகழ்வுகள் இடம்பெறும் என்பதும் உறவினர்கள் வீட்டின் உள்ளே வரும்போது சம்பந்தப்பட்ட போட்டியாளர்

பூமியில் கிடைக்காத ஒரு பொருளை பரிசாகக் கொடுத்த கணவன்… நெகிழ்ச்சி சம்பவம்!!!

பூமியில் இல்லாத ஒரு பொருள் என்றால் அதற்காக விண்வெளிக்குத்தான் போக வேண்டும்.