அமலாபால் காதலர் தினத்தை யாருடன் கொண்டாடினார் தெரியுமா?

  • IndiaGlitz, [Thursday,February 15 2018]

கடந்த சில மாதங்களாகவே நடிகை அமலாபால் ஊடகங்களின் தலைப்பு செய்திகளில் இடம்பெற்று கொண்டிருக்கின்றார்,. இயக்குனர் விஜய்யை விவாகரத்து செய்த பின்னர் கோலிவுட்டின் பிசியான நடிகையாக மாறிய அமலாபால், சமீபத்தில் வெளிநாட்டு கார் வாங்கியதில் ஏற்பட்ட வரி பிரச்சனை, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலதிபரை தைரியமாக போலீசிடம் பிடித்து கொடுத்தது போன்ற பரபரப்பு செய்திகளில் இடம்பெற்றுள்ளார்

இந்த நிலையில் நேற்றைய காதலர் தினத்தை அவர் தனது செல்ல நாய்க்குட்டியுடன் கொண்டாடியதாக புகைப்படத்துடன் கூடிய தகவலை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் பயணம் செய்வதன் மூலம் நிறைய கற்றுக்கொள்ள முடிவதாகவும் அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

அமலாபால் நடித்த 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' திரைப்படம் மிக விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அவர் தற்போது 'ராட்சஷன்' என்ற படத்தில் விஷ்ணுவுடன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கார்த்திக் நரேன் இயக்கும் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான 'துருவங்கள் 16' படத்தின் மூலம் கோலிவுட்டின் கவனத்தை தனது பக்கம் திருப்பிய 22 வயது இளைஞர் கார்த்திக் நரேன்.

மாட்டிடம் இருந்து தம்பியை காப்பாற்ற வீராங்கனையாக மாறிய 8 வயது சிறுமி

8 வயது சிறுமி ஒருவர் தனது உடன்பிறந்த தம்பியை காப்பாற்ற மாட்டுடன் மோதிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

20 வருடங்களுக்கு முன்பே திறமையை நிரூபித்த தளபதி விஜய்

தளபதி விஜய் இன்று இந்தியாவின் முன்னணி ஸ்டார் என்பது அனைவரும் அறிந்ததே.

மனைவிகளின் உதவியால் வித்தியாசமான முறையில் தங்கம் கடத்திய சென்னை நபர்

வெளிநாட்டில் இருந்து தங்கத்தை சட்டவிரோதமாக கடத்தி வரும் கும்பல்கள் ஒவ்வொரு முறையும் வித்தியாசமான முறைகளை கடைபிடித்தாலும் விமான நிலைய அதிகாரிகளின் கழுகுப்பார்வையில் சிக்கிவிடும் கதை

லைகாவில் இருந்து விலகி வந்த செயல் அதிகாரிக்கு ரஜினி கொடுத்த முக்கிய பதவி

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் லைகா நிறுவனத்தின் செயல் அதிகாரியாக இருந்த ராஜூமகாலிங்கம் அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் ரஜினியுடன் இணைந்து அரசியலில் ஈடுபட போவதாக கூறப்பட்டது.