ஊதி ஊதி வெறுப்பேற்றிய கணவர்.. கன்னத்தில் ஒரு பளார்.. அமலாபால் லேட்டஸ்ட் வீடியோ..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகை அமலாபால் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் அவரது தலை முடியை ஊதி ஊதி வெறுப்பேற்றிய கணவரை கன்னத்தில் செல்லமாக அடிக்கும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகிறது.
நடிகை அமலாபால் கடந்த ஆண்டு தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர் கர்ப்பமானார் என்பதும் இன்னும் ஒரு சில நாட்களில் அவருக்கு குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருவார் என்பதும் அவை மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் தெரிந்தது. மேலும் கர்ப்பிணியாக இருக்கும்போது கூட அவர் தான் நடித்த படங்களின் ப்ரோமோஷன் விழாவுக்கு சென்று வருகிறார் என்று செய்திகள் வெளியானது.
தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அமலாபாலுக்கு இன்னும் ஒரு சில நாட்களில் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அமலாபால் சீரியஸாக பேசிக் கொண்டிருக்கும்போது, அவரது கணவர் அவருடைய முடியை ஊதுகிறார். தொடர்ந்து அதை செய்து கொண்டிருந்த நிலையில் ஒரு கட்டத்தில் கடுப்பான அமலாபால் செல்லமாக தனது கணவரின் கன்னத்தில் அடிக்கும் காட்சி அந்த வீடியோவில் உள்ளன. இந்த க்யூட்டான வீடியோவுக்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ் மற்றும் நூற்றுக்கணக்கான கமெண்ட் குவிந்து வருகிறது.
இந்த நிலையில் அமலாபால் நடித்த ’லெவல் கிராஸ்’ என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தை ‘த்ரிஷ்யம்’ படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments