'தலைவா' படத்திற்கு பின்னர் மீண்டும் இணைந்த விஜய்-அமலா

  • IndiaGlitz, [Monday,July 20 2015]

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கிய 'தலைவா' படத்தில் விஜய்க்கு ஜோடியாக அமலாபால் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பின்னர் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து கொண்ட அமலாபால், சினிமாவில் நடிப்பதை குறைத்து கொண்டார். ஆனாலும் சமீபத்தில் தயாரிப்பாளராக மாறி, பிரியதர்ஷன் இயக்கும் அடுத்த படத்தை தயாரித்து வருகிறார்.


இந்நிலையில் மீண்டும் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பை அமலாபால் பெற்றுள்ளார். ஆனால் இம்முறை அவர் நடிப்பது திரைப்படத்தில் அல்ல, விளம்பரப்படத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் பிரபல நகைக்கடை ஒன்றின் பிராண்ட் அம்பாசிடர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அந்த நகைக்கடையின் புதிய விளம்பர படம் ஒன்று தற்போது எடுக்கப்பட்டு வருவதாகவும், இந்த விளம்பரப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக அமலாபால் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த விளம்பர படத்தின் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது. விரைவில் இந்த விளம்பரம், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது.

More News

கமல், ரஜினியை கன்னட சூப்பர் ஸ்டார் சந்தித்தது ஏன்?

கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், நடிகர் சிவராஜ்குமார் கோலிவுட் நடிகர்களிடம் அவ்வப்போது தொடர்பில் இருப்பார்...

'மருதநாயகத்திற்கு வழிகாட்டுகிறதா பாகுபலி?

இந்தியாவின் மாபெரும் பட்ஜெட் படமான 'பாகுபலி' திரைப்படம் இரண்டாவது வாரமாக வெற்றிகரமாக நல்ல வசூலுடன் ஓடிக்கொண்டிருக்கின்றது...

இறவியை முடித்த எஸ்.ஜே.சூர்யா-பாபிசிம்ஹா

பீட்சா, ஜிகர்தண்டா படங்களை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் மூன்றாவது படமான 'இறவி' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...

மீண்டும் தொடங்கியது பாலாவின் 'தாரை தப்பட்டை'

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் 'தாரை தப்பட்டை' திரைப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், இறுதிக்கட்ட படப்பிடிப்பை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது...

காக்க காக்க, தடையற தாக்க வரிசையில் 'தாக்க தாக்க'

சூர்யாவுக்கு 'காக்க காக்க' படமும், அருண்விஜய்க்கு 'தடையற தாக்க' படமும் கொடுத்த திருப்புமுனையை இளையதளபதி விஜய்யின் உறவினரான விக்ராந்துக்கு 'தாக்க தாக்க' படம் ...