அமீர்-வெற்றிமாறன் படத்தின் டைட்டில் அறிவிப்பு!

தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் இயக்குனர் அமீர் ஆகிய இருவரும் ஒரே படத்தில் இணைய உள்ளதாக வெளியான அறிவிப்பு குறித்து ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றிமாறன் கதையில் அமீர் திரைக்கதை வசனம் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் டைட்டில் ’இறைவன் மிகப் பெரியவன்’ என்று வைக்கப்பட்டுள்ளது.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய உள்ளார். சூரி, ஆர்யாவின் சகோதரர் சத்யா உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் முழு தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது வெளியாகியுள்ள இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சொகுசு பேருந்து கிலோ ரூ.45… விரக்தியில் கூவிகூவி விற்கும் முதலாளியின் பரிதாபம்!

கேரளாவில் பேருந்து உரிமையாளர் ஒருவர் தன்னுடைய சொகுசு பேருந்துகளை கிலோ ரூ.45 என்று கூறுபோட்டு விற்கும்

முதல்முறையாக மைக் மோகனுடன் ஜோடி சேரும் குஷ்பு!

கடந்த 80 களில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்த சில்வர் ஜூப்ளி ஸ்டார் மோகன் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும்

புது காதலிக்காக… மனைவியை கொன்று தந்தூரி அடுப்பில் வேகவைத்து சாப்பிட்ட கணவன்!

பிரேசில் நாட்டில் புதிதாகச் சந்தித்த தோழி ஒருவருக்காக தனது மனைவியை கொன்று தந்தூரி அடுப்பில் வேகவைத்து சாப்பிட்ட

முதல் லாட்டரியிலேயே 35 கோடி ரூபாய் பரிசு… மகிழ்ச்சியில் இளம்பெண்!

இங்கிலாந்து நாட்டில் கணவர் ஒருவர் பல வருடங்களாக லாட்டரி

காஜல் அகர்வாலின் அடுத்த தமிழ்ப்படத்திற்கு 'யூ' சான்றிதழ்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால் நடித்து முடித்துள்ள அடுத்த தமிழ் படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சான்றிதழ் கொடுத்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.