close
Choose your channels

வாழ்க்கை எப்போதுமே ஒரு மாயவலை தான்: அமீர் நடித்த படத்தின் டீசர்..!

Saturday, December 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அமீர் நடிப்பில் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவான ’மாயவலை’ என்ற திரைப்படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அமீர் முக்கிய கேரக்டரில் நடித்த இந்த படத்தில் சஞ்சிதா ஷெட்டி, சரண், தீனா, வின்சென்ட் அசோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகிய இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் டீசரில் ’நான் ராஜன், இது சாரா, இது சத்யா, எங்க மூணு பேருக்கும் இடையே அன்பு இருக்கு, பாசம் இருக்கு, காதல் இருக்கு. இதெல்லாம் ஒரே நாளில் எங்ககிட்ட வந்து சேர்ந்திருக்க முடியாது. ஆனால் எப்படி இதெல்லாம் ஒரே நாளில் எங்களுக்குள் முடிவுக்கு வந்தது? இந்த பிரச்சனையை யார் தொடங்கினார்கள்? எப்படி நடந்தது? எங்கிருந்து ஆரம்பமானது? எல்லாமே மாயமாக இருக்கிறது.

அடுத்த நிமிஷம் என்ன நடக்குதுன்னு தெரியாம கற்பனையில் வாழ்ந்து வருகிறோம் பாருங்க, அதுதான் வாழ்க்கையின் சுவாரசியம். வாழ்க்கை எப்போதுமே ஒரு மாயவலை தான்’ என்ற அமீர் பேசும் வசனம் இந்த டீசரில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos