திருமணம் எப்போது? காதலர் தினத்தில் செம அறிவிப்பை வெளியிட்ட அமிர்-பாவனி..!

  • IndiaGlitz, [Tuesday,February 14 2023]

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக இருந்த அமீர் மற்றும் பாவனி பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதே காதலித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில் அந்த காதல் வெளியே வந்த பின்னரும் தொடர்ந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். பல நிகழ்ச்சிகளில் இருவரும் இணைந்து கலந்து கொண்ட நிலையில் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் முன்னணி ஊடகம் ஒன்றுக்கு காதலர் தினத்தை ஒட்டி பேட்டி அளித்த போது, ‘நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வது உறுதி, ஆனால் அதே நேரத்தில் இன்னும் ஒரு வருடம் கழித்து தான் திருமணம் செய்வோம், திருமணத்திற்கு முன்பு நாங்கள் எங்கள் துறையில் சாதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

திருமணம் குறித்து பாவனி கூறியபோது, ‘எனக்கு விரைவில் திருமணம் செய்து கொண்டு குழந்தைகள் பெற்றுக்கொண்டு குடும்பத் தலைவியாக குழந்தைகளுடன் வாழ வேண்டும் என்று ஆசை என்றும் அந்த நாள் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

திருமணம் செய்து விட்டால் பொறுப்புகள் அதிகமாகும் என்றும் அதற்குள் நாங்கள் எங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்றும் எங்களுடைய தொழிலில் நன்றாக காலூன்ற வேண்டும் என்றும் அதன் பிறகு தான் திருமணம் என்றும் அமீர்-பாவனி ஆகிய இருவருமே அந்த பேட்டியில் தெரிவித்து உள்ளனர். இதனை அடுத்து அமீர்-பாவனி திருமணம் விரைவில் என்பது உறுதி செய்யப்பட்டாலும் இந்த வருடம் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

More News

'ஜவான்' படத்தில் ஒரு ரோலக்ஸ்.. விஜய்க்கு பதில் இந்த பிரபல நடிகரா?

'ஜவான்' திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் தளபதி விஜய் நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு பதிலாக வேறொரு பிரபல நடிகர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 

கவினை காதலிக்கின்றாரா விஜய் பட நடிகை? இன்ஸ்டாகிராம் பதிவால் குழம்பிய ரசிகர்கள்..!

விஜய் படத்தில் நடித்த நடிகை ஒருவர் கவின் குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் இருவரும் காதலிக்கின்றார்களா? என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. 

'கேப்டன் மில்லர்' இயக்குனர் வெளியிட்ட மாஸ் புகைப்படம்.. தனுஷ் ரசிகர்கள் குஷி..!

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் 'கேப்டன் மில்லர்' படத்தின் படப்பிடிப்பின் போது எடுத்து புகைப்படங்களை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள்

அடுத்தடுத்து 3 வெற்றிப்படங்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த படத்தின் ரிலீஸ் தகவல்..!

அடுத்தடுத்து மூன்று வெற்றி படங்களில் நடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

தாலி கட்டும்போது என்ன ஒரு வெட்கம்..? விஜய் டிவி பிரியங்காவின் திருமண புகைப்படங்கள்..!

விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளியான பிரியங்காவின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் அதில் அவர் வெட்கப்படும் காட்சியை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.