close
Choose your channels

ஹெல்மெட் அணியாமல் டூவீலர் பயணம்… சர்ச்சையில் மாட்டிய இரு பெரிய பிரபலங்கள்!

Wednesday, May 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட் சினிமாவில் பிக் பி என அழைக்கப்படும் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சனும் அதேபோல முன்னணி நடிகைகளுள் ஒருவருமாகிய அனுஷ்கா சர்மா இருவரும் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இருசக்கர வாகனத்தில் பயணம் செய்வோரின் பாதுகாப்புக்காக ஹெல்மெட் அணிவது மும்பை நகரத்தில் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் தனது சொகுசு காரில் பயணம் செய்த நடிகர் அமிதாப் பச்சன் ஒரு பெரிய போக்குவரத்து நெருக்கடியில் மாட்டிக்கொண்டபோது தனது காரை விட்டு இறங்கி யாரென்றே தெரியாத ஒரு நபரின் இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு பயணித்திருக்கிறார். மேலும் தனக்கு லிப்ட் கொடுத்த அந்த நபருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக புகைப்படத்தையும் தனது சமூகவலைத் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படம்தான் தற்போது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

நடிகர் அமிதாப் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணித்ததைப் பார்த்த ரசிகர்கள் சிலர், ஒரு நடிகரே இப்படி ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்யலாமா? மும்பை போலீஸார் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கமாட்டார்களா? என்று சரமாரியாகப் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தனர். அதேபோல மற்றொரு சாலையில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணித்த நடிகை அனுஷ்கா சர்மாவின் புகைப்படமும் சோஷியல் மீடியாவில் வெளியான நிலையில் இதேபோன்ற கேள்விகளை நடிகை அனுஷ்கா சர்மா குறித்தும் ரசிகர்கள் எழுப்பி இருந்தனர்.

இந்த விமர்சனத்திற்கு பதிலளித்த மும்பை போலீஸார், போக்குவரத்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்ததால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஹெல்மெட் அணியாமல் பிரபலங்களே பயணித்த தகவல் தற்போது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment