close
Choose your channels

நடிகர் சங்கத்தில் கமல்ஹாசனுக்கு முக்கிய பதவி: ஒப்புதல் தீர்மானம் நிறைவேற்றம்

Thursday, March 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி வெற்றி பெற்றது என்பதும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக நாசர், பொதுச்செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி மற்றும் துணை தலைவர்களாக கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோர் சமீபத்தில் பதவி ஏற்றனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் நடிகர் சங்கத்தில் உலக நாயகன் கமலஹாசனுக்கு முக்கிய பதவி வழங்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. நடிகர் சங்க அறக்கட்டளையின் அறங்காவலர் குழு உறுப்பினராக கமல்ஹாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்கான ஒப்புதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கமல்ஹாசனுடன் பூச்சி முருகன், ராஜேஷ், லதா, கோவை சரளா, சச்சு ஆகியோரும் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த அறங்காவலர் குழு தலைவராக நாசர் செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடிகர் சங்க கட்டிட பணியை மீண்டும் தொடங்கச் தீவிர முயற்சி செய்யப்பட்டு வருவதாகவும் இதற்காக நிதி திரட்டுவதற்காக ரஜினிகாந்த் உள்பட முன்னணி நடிகர்களை நேரில் சந்தித்து உதவி கேட்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.